சமந்தா நடிப்புலு டாப்புனு தெரியும். ஆனால், படிப்புல எப்படி தெரியுமா? இதோ அவரது 10வகுப்பு ரிப்போர்ட் கார்ட்.

0
2809
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் தமிழ்,தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பட்டைய கிளப்புகிறார். இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் 10ம் வகுப்பு படிக்கும் போது வாங்கிய மதிப்பெண்கள் பற்றிய ரிப்போர்ட் கார்டு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

-விளம்பரம்-

தற்போது கொரோனா லாக்டவுனில் தனது வீட்டிலேயே கணவருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் சமந்தா. இவர் இந்த பொன்னான நேரத்தை வீணாக்காமல் தனக்கு பிடித்த பல விஷயங்களை செய்து வருகிறார். சில வாரங்கள் முன்பு சமந்தா ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு பயிற்சி ஆன்லைனில் பெற்று வருவதை புகைப்படமாக வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சமந்தா பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட் கார்டின் புகைப்படம் வேகமாக பரவி உள்ளது. அதை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார். சமந்தா பள்ளியில் நன்றாக படிக்கும் பெண் என்று ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது கொரோனா லாக்டவுனில் சமந்தா தனது வீட்டிலேயே விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளார். மேலும், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement