அந்த விளம்பரத்தை நிறுத்தங்கள் ! போலீசில் புகார் கொடுத்த சமையல் மந்திரம் திவ்யா..!

0
1330
samayal manthiram Divya

கேப்டன் டீவி யில் இரவு 11 மணிக்கு மேல் ஒரு மருத்துவர் வந்து அந்தரங்க கேள்விகளுக்கு நேயர்களுக்கு பதிலளி ப்பார் ஆனால் அந்த டாக்டரை விட இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமானது அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து திவ்யா கிருஷ்ணன் என்பவர் தான்.

Divya samayal manthiram

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக கேப்டன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த வருகிறார், அதுமட்டும் இன்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் வேலை பார்த்த போது பாலியல் சக்தியை அதிகரிக்கும் மாத்திரை விளம்பரத்தில் ஒன்றில் நடித்திருந்தார். தற்போது அந்த விளம்பரத்தை நிறுத்துமாறு காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இது பற்றி அவர் தெரிவிக்கையில்..அந்த விளம்பரத்தில் நடித்த போது அந்த விளம்பரம் 3 மாதங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும் என்று கூறியிருந்தனர்,ஆனால் தான் நடித்த அந்த விளம்பரம் 2 ஆண்டுகளாக ஒளிபரப்புவதாக கூறியுள்ளார்.இதனால் விளம்பரத்தை தடை செய்யக்கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதன்படி, நீதிமன்றமும் விளம்பரத்தை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்தாக திவ்யா தெரிவித்துள்ளார். ஆனால், அந்த விளம்பரம் இன்னமும் தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதால் அதை தடை செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளாராம் திவ்யா.