கவர்ச்சியாக தெரிய அறுவை சிகிச்சை செய்ய சொன்னர் – பாலிவுட் சினிமாவின் நடக்கும் உண்மையை கூறிய சமீரா

0
559
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில நடிகைகள் மட்டுமே திருமணத்திற்கு பின் சினிமாவில் நிலைத்து நடித்து வருகின்றனர். ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பின் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் ஆகிவிடுகின்றனர். அந்த வகையில் சமீரா ரெட்டியும் ஒருவர் தான். பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார். 

-விளம்பரம்-

இப்படத்தில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரின் இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவு பேசப்பட்டது. 1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி அஜித் நடித்த சிடிஸின் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பலபடங்களில் நடித்து வந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

குடும்பம் :

திருமணத்திற்கு பின் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். தனது 34 வயதில் திருமணம் செய்துகொண்ட நடிகை சமீரா ரெட்டி திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார்.மேலும், இரண்டாவது முறையாக கற்பமாக இருந்த சமீரா ரெட்டிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி இரண்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தன்னுடைய குழந்தைகளுடன் சமீரா ரெட்டி வாழ்ந்து வருகிறார்.

தவறான முறையில் பார்த்த இயக்குனர் :

இப்படி பட்ட நிலையில் தான் அதிர்ச்சியூட்டும் விஷயம் ஒன்றை நடிகை சமீரா கூறியுள்ளார். தான் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போது கவர்ச்சியாக தெரிய அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயக்குனர் ஒருவர் தன்னை கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார். சமீப காலமாகவே சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தங்களுக்கு நடந்த மோசமான நிலைமையை மீடு மூலம் தெரியப்படுத்தி வரும் நிலையில் இவர் இப்படி கூறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

அறுவை சிகிச்சை செய்ய வற்புறுத்தினார் :

அவர் கூறுகையில் தான் சினிமாவில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது இயக்குனர் ஒருவர் தன்னை மோசமாக பார்த்தார் என்றும் நான் படத்தில் கவர்ச்சியாக தெரிய என் உடலில் சில பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று அந்த இயக்குனர் என்னை வற்புறுத்தினார். நான் மறுத்தேன் இருந்தாலும் தொடர்ந்து என்னை கட்டாயப்படுத்த நான் அவர் சொல்வதை கடைசி வரையில் செய்யவேயில்லை என்று நடிகை சமீரா கூறியுள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா கூட :

சமீபத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும் தன்னை ஒருவர் அஜ்ஜஸ்மென்ட் செய்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக இயக்குனர் கூறினார் என்று நயன்தாரா கூறியது குறிப்பிடத்தக்கது. இப்படி இத்தொடர்ந்து பல நடிகைகள் தங்களுடைய சினிமா வாழ்வில் நடந்த கசப்பான விஷியங்களை கூறிவருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement