இரண்டு குழந்தைக்கு பின் ஏறிய உடல் – அசால்டாக 10 கிலோவை குறைத்த சமீரா ரெட்டி. வேற லெவல் Transformation

0
318
sameera
- Advertisement -

எளிதாக 10 கிலோ வரை உடம்பைக் குறைக்கலாம் என்று நடிகை சமீரா ரெட்டி அளித்து உள்ள டிப்ஸ் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சமீரா ரெட்டி. இவர் பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் வெடி, வேட்டை, அஜித் உடன் அசல் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பிறகு 2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் என்ற தொழிலதிபரை சமீரா ரெட்டி திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர் முழு கவனமே குடும்பத்தில் செலுத்தி வந்தார். பின் சமீரா நடிப்பிலிருந்து முழுவதும் குட் பை சொல்லிவிட்டார். சமீரா சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வருகிறார்.

- Advertisement -

சமீரா ரெட்டியின் குடும்பம்:

தற்போது சமீராவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் தன் குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ, புகைப்படம் என்று அனைத்தையும் பகிர்ந்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி ஒர்க்கவுட், குழந்தை வளர்ப்பு, உணவு பழக்கம் குறித்த பல எண்ணற்ற கருத்துகளை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது சமீரா உடல் எடையை குறைப்பதற்கான டிப்ஸ் ஒன்றை கூறி இருக்கிறார்.

சமீராவின் உடற்பயிற்சி டிப்ஸ்:

சமீரா அவர்கள் தற்போது பத்து கிலோ அளவிற்கு உடம்பை குறைத்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பது, ஒரு வாரத்திற்கு முன்பு எனது உடல் தகுதியை பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். அதனால் 92 கிலோவில் இருந்து தற்போது நான் 81 கிலோ வரை குறைத்திருக்கிறேன். இப்போதுகூட உயரத்திற்கு தேவையான உடல் எடை அதிகமாக இருக்கிறது. ஆனால், அதிக ஆற்றலுடன் சுறுசுறுப்பாக என்னால் இயங்க முடிகிறது. இதற்கு காரணம் என்ன என்பது தெரியுமா? இதோ அதற்கான டிப்ஸ்:

-விளம்பரம்-
  1. உடல் எடையை குறைக்கலாம் என முயற்சிக்கும் போது அதிலிருந்து சில சமயங்களில் பின் வாங்குகிறேன். ஆனாலும், நான் உடனடியாக அந்த வழியில் மீண்டும் திரும்பி விட்டேன். அதோடு உண்ணாவிரதம் இருக்க கற்றுக் கொண்டதால் இரவு நேர சிற்றுண்டி பழக்கத்தை என்னால் எளிதாக விலக்க முடிந்தது.
  2. உடல் எடை குறைக்க முடியுமா? என்ற நெகட்டிவ் எண்ணத்திலிருந்து விடுபட வேண்டும். நான் தற்போது நல்ல உடல் தகுதியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பின் நிறைய வேலைகளை செய்கிறேன். இதில் சாப்பாடு முக்கியம்.
  3. ஒர்க்கவுட்டை மட்டுமே நம்பாமல் ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது உடற்பயிற்சியை விளையாட்டாகவே செய்ய உதவும்.
  4. ஒவ்வொரு வாரமும் உங்கள் முன்னேற்றத்தை சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்க நண்பர்களை கூடவே வைத்துக் கொள்ளுங்கள்.
  5. எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் உடனடியாக உடல் எடையை குறைக்க முயற்சிக்காதீர்கள்.
  6. உங்கள் உடல் எடையை நினைத்து நீங்கள் வருத்தப்படுவதால் எந்த மதிப்பும் கிடையாது என்று சமீரா தன்னுடைய உடற்பயிற்சி அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

வைரலாகும் சமீராவின் டிப்ஸ் பதிவு:

இப்படி சமீரா பதிவிட்ட புகைப்படமும், டிப்ஸும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் சமீபகாலமாகவே சினிமா பிரபலங்கள் பலரும் ஒர்க் கவுட் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ புகைப்படங்கள் என எல்லாத்தையும் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இதனால் ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நடிகை சமீரா கூறிய டிப்ஸ் எல்லாம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல குடும்பப் பெண்களுக்கும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிடத்தக்கது.

Advertisement