பொள்ளாச்சி சம்பவம் குறித்து இதனால் தான் பேசல.! சமந்தாவின் பதிலால் ரசிகர்கள் ஷாக்.!

0
752
- Advertisement -

தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் தான் தற்போது நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெண்களை ஆசை வார்த்தை பேசி அவர்களை உடலுறவில் ஈடுபட வைத்து வீடியோ எடுத்து, அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை சேர்ந்த 4 பேர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

-விளம்பரம்-

இவர்கள் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ஆனால், இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்தாது எனவும் அரபு நாடுகளைப் போல இவர்களை மக்கள் மத்தியில் கொடூரமாக கொலை செய்து தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிலர் இன்னும் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவதால் அவர்களையும் கைது செய்யக்கோரி பொள்ளாச்சியில் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுபட்டனர். ஆனால், அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதையும் படியுங்க : பொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.! வீடியோ வெளியிட்ட நபர்.! 

- Advertisement -

இப்படி தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். ஆனால், ஒரு சில முன்னணி நடிகைகள் இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்தனர். அதில் முன்னணி நடிகையான சமந்தாவும் ஒருவர்.

சமீபத்தில் இதுகுறித்து பேசிய சமந்தா, இது போன்ற மாதிரி சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. சில ஆயிரம் பேருக்கு தெரிந்த அந்த சம்பவம், நான் பேசினால் பல லட்சம் பேருக்கு தெரியும். நாமே அதை விளம்பரப்படுத்தியது போலாகி விடும். அதனால் தான் அதை பற்றி நான் பேசவில்லை என்று சப்பைகட்டு காட்டியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement