நீண்ட வாரங்களுக்கு பின்னர் தன்னை பற்றி வந்த மீம்களுக்கு சமுத்திரக்கனி கொடுத்த பதிலடி.

0
2567
samuthrakani
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுப்பதில் வல்லவர் சமுத்திரகனி. இவரது படங்களில் எப்போதும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் இருக்கும். இவர் புகழ் பெற்ற இயக்குனர் கே. பாலச்சந்தரன் இடம் துணை இயக்குனராக பணி புரிந்தவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். பின் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியில் படங்களை இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுத்து வருகிறார் சமுத்திரகனி. இவரது படங்கள் எப்போதும் சமூகத்திற்கு கருத்து சொல்லும் வகையில் இருக்கும். இவர் நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா என கிட்டத்தட்ட 10 படங்களை இயக்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சோசியல் மீடியாவில் தற்போது பயங்கர ட்ரெண்டிங்கில் சமுத்திரக்கனி மீம்ஸ்கள் தான் உள்ளது.என்னை பற்றி வந்த மீம்களைப் பற்றி நான் ரொம்ப சந்தோஷமாக தான் பார்த்தேன். நான் நடிப்பதற்கு எத்தனை கதாபாத்திரங்கள் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். ஆனால் என்னுடைய மகன் தான் இதையெல்லாம் எனக்கு எடுத்துக் காட்டினான். அவனுக்கு இது எல்லாம் வருத்தம் தான். இதை எல்லாம் பாசிடிவாக எடுத்துக்கொள் எவ்வளவு கெட்டப் போட்டு எனக்காக மீம்ஸ் உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்த உழைப்பை மதிக்கணும் இதில் நல்ல கெட்ட பார்வை இருந்தால் அதை படத்தில் பயன்படுத்திக் கொள் வேண்டியதுதான் என்று சொன்னேன் என்று கூறியுள்ளார் சமுத்திரக்கனி. மேலும், மேலும் என்னுடைய மகள் ஏழாவது படித்துக் கொண்டிருக்கிறார்கள் என் மனைவி ஜெயலட்சுமி அக்கா பொண்ணு என் அம்மாவுக்கு பிறகு இவங்க தான் எல்லாம் என்னை நல்லா கவனிக்கிறான் ரொம்ப சந்தோஷமாக வாழ்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement