மிஷ்கினுக்கு ஆதரவாக சமுத்திரகனி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் மிஸ்கினின் சர்ச்சை பேச்சு தான் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் சினிமாவில் தேர்ந்தவர் மிஸ்கின். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=Bx8xowePcFs
இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இவர் சமீபகாலமாக மேடைகளில் பேசுவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி இருந்த பாட்டில் ராதா படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது மிஸ்கின் பேசி இருந்தது மிக பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. சோசியல் மீடியாவில் பலருமே மேடை நாகரீகம் இல்லாமல் மிஸ்கின் பேசி இருப்பது ரொம்ப தவறு என்று அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.
மிஸ்கின் பேச்சு:
அந்த வகையில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் பட விழாவில் மிஸ்கினை வெளுத்து வாங்கி இருந்தார். இவரை அடுத்து பல பிரபலங்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து மிஸ்கின், பாடலாசிரியர் தாமரிடம் தான் மன்னிக்க மன்னிப்பு கேட்க நினைக்கிறேன். அவர் என்னை விமர்சித்து பேசி இருந்தார். வெற்றியால் தான் நான் அப்படி பேசி இருக்கிறேன் என்றெல்லாம் சொன்னார். 18 ஆண்டுகளாக நான் இந்த சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறேன். இரண்டாவதாக எனக்கு பிடித்த நண்பர் லெனின் பாரதியிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவர் என்னை தத்துவ ரீதியில் விமர்சனம் செய்திருந்தார்.
https://www.youtube.com/watch?v=HaAMZ_c6Eqo
மிஸ்கின் மன்னிப்பு:
அவரை அடுத்து நடிகர் அருள்தாஸ் என்னை விமர்சித்து இருந்தார். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். கடந்த மூன்று நாட்களாக அவர் என்னை திட்டி திட்டி ரொம்ப பிரபலமாகிவிட்டார். அவரிடமும் என்னுடைய மன்னிப்பை கேட்கிறேன். அதேபோல் என்னை வைத்து படம் செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர் தாணு விடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதே போல் யாரோ ஒருவன் என் மீது செருப்பெறிய வேண்டும் என்று கூறியிருந்தார். தயவுசெய்து ரெண்டு செருப்பாக எரியுங்கள். அதிலும் எட்டாம் நம்பர் பார்த்து எறியுங்கள். ஆழ் மனதில் இருந்து பேசிய போது ஒரு சில வார்த்தைகள் வந்து விட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசி இருந்தார்.
சமுத்திரகனி பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமுத்திரகனி, மிஸ்கினுக்கு ஆதரவாக பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியிருந்த திரு.மாணிக்கம்
படத்தினுடைய வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் மிஸ்கின் தொடர்பான கேள்விக்கு சமுத்திரகனி, அந்த பிரச்சனை தான் முடிந்து விட்டது. மிஸ்கின் எல்லோருடைய காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். அது போதவில்லையா? அதற்கான விளக்கமும் கொடுத்து விட்டார். அவர் உணர்ச்சிவயமான மனிதர். என்னை பார்க்கும் போது கூட மிஸ்கின் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி முதுகில் அடித்து மீண்டும் கெட்ட வார்த்தை சொல்லி தான் பாசமாக நலம் விசாரிப்பார். அவர் அன்பின் உச்சத்தில் தான் இதையெல்லாம் வெளிப்படுத்துகிறார். அதை நான் தவறாகவே பார்க்கவில்லை.
https://www.youtube.com/watch?v=bl6kV-2wSMM
சமுத்திரகனி ஆவேசம்:
அது அவருடைய இயல்பான குணம். அன்பின் உச்சத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நம்முடைய கிராமத்திற்கு சென்றாலே கெட்ட வார்த்தை மூலம் தான் அன்பை வெளிப்படுத்துவார்கள். நாங்கள் இயல்பாக அப்படித்தான் பேசுவோம். அதே மாதிரி மேடையிலும் மிஸ்கின் பேசி விட்டார். அதே மாதிரி தான் மேடையில் மிஸ்கின் பேசியிருக்கிறார். மிஸ்கின் செய்தது தவறு கிடையாது. எல்லோரும் விமர்சித்ததற்கு அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். அதையும் மீறி என்ன செய்ய வேண்டும்? இரு கரம் கூப்பி உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா? அவரைப் பற்றி புரிந்தவர்களுக்கு தெரியும். புரியாதவர்களுக்கு தான் இந்த மன்னிப்பு. என்னுடைய அண்ணனுக்காக நானும் கூட உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதோட மிஸ்கின் பேசும்போது நீங்களும் சிரித்துக்கொண்டு தானே இருந்தீர்கள்? அப்போதெல்லாம் கேள்வி கேட்காமல் இப்ப ஏன் கேட்கிறீர்கள்? என்று பத்திரிகையாளர்களையே விமர்சித்து பேசியிருந்தார்.





