விஜய் டிவி சீரியல் நடிகைக்கும் சன் டிவி சீரியல் நடிகருக்கு முடிந்த திடீர் திருமணம் – அதுவும் லவ் மேரேஜாம்.

0
1549
samyuktha
- Advertisement -

காதல் முதல் கல்யாணம் வரை குறித்து சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகை சம்யுக்தா கண்ணீர் விட்டு கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் சிப்பிக்குள் முத்து. இந்த சீரியல் ஒரு தெலுங்கு சீரியல்லின் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் தனது தங்கை காதல் நிறைவேறுவதற்காக மனநிலை சரியில்லாத அண்ணனை அக்கா திருமணம் செய்து கொள்கிறார்.

-விளம்பரம்-

இதனை அடுத்து கதை தான் சிப்பிக்குள் முத்து சீரியல். இந்த தொடரை விரைவாகவே முடித்து விட்டார்கள். மேலும், இந்த சீரியலில் ஹீரோவின் தம்பியாக அபினவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் விஷ்ணுகாந்த். இவர் இதற்கு முன்பே பல தொடர்களில் நடித்திருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பிரபலமான தொடரிலும் இவர் நடித்திருக்கிறார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்திருந்தார்.

- Advertisement -

சம்யுக்தா குறித்த தகவல்:

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் ஹீரோவின் தம்பியாக நடித்து வருகிறார். இதனிடையே இவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை சம்யுக்தா காதலித்து வந்தார். இது குறித்து இருவருமே பகிரங்கமாக அறிவித்து இருந்தார். சம்யுக்தா வேற வேற யாரும் இல்லைங்க, அவரும் பிரபலமான சீரியல் நடிகை தான். இவர் சின்ன திரையிக்கு வருவதற்கு முன்பு youtube சீரிஸ்களில் நடித்திருக்கிறார்.

விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா காதல்:

அதிலும், குறிப்பாக நிறைமாத நிலவே என்ற வெப் சீரிஸ்ஸில் நடித்திருந்தார். இந்த தொடரின் மூலம் தான் சம்யுக்தா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்திருந்தார். அதற்கு பின்பு தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. சிப்பிக்குள் முத்து சீரியலை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு என்ற தொடரில் நடித்து வருகிறார். மேலும், இருவருமே தாங்கள் காதலிப்பதை குறித்து சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா திருமணம்:

இதனை அடுத்து கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் இவர்களுடைய திருமண வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். அதில், விஷ்ணுகாந்த் எனக்கு ஒரு நாள் போன் செய்து என்னை உனக்கு பிடித்து இருக்கிறதா? என்று கேட்டார். நானும் பிடித்திருக்கிறது என்று சொன்னேன். உடனே அவர், நான் அதை கூறவில்லை. நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னார்.

திருமண வீடியோ:

எனக்கும் அவரை பிடித்திருந்தால் ஓகே சொல்லிவிட்டேன். அப்படியே எங்களுடைய காதல் கதை அழகாக தொடங்கியது என்று வரவேற்பு, திருமணம், தாலி கட்டியது போன்ற அழகிய தருணங்களை வீடியோக்களாக வெளியிட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதுவரை இந்த வீடியோவை ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து இருக்கின்றனர் .

Advertisement