‘அவருக்கும் இப்படி நடந்து இருக்குனு அவரே ஒத்துக்கிட்டாரு’ – பேச்சு வாக்கில் உண்மையை உளறி அபிராமி. வச்சி செய்யும் சனம் ஷெட்டி.

0
783
Sanam
- Advertisement -

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து பிக் பாஸ் பிரபலம் அபிராமி கல்லூரிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் நிலையில் தற்போது அபிராமிக்கு சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார் சனம் ஷெட்டி. சென்னையில் இயங்கி வரும் கலாக்ஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீதான ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கின்றனர். மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கில் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஐதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

-விளம்பரம்-

கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்ரல் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவரை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கலாஷேத்ராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் அபிராமி. இதுகுறித்து பேசிய அவர் “நானும் கலாஷேத்ரா கல்லூரியில் படித்தவள் தான்.

- Advertisement -

அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலே குரல் கொடுப்பேன் என்றும் கூறி இருந்தார். அபிராமியின் இந்த கருத்திற்கு பலரும் ஆதரவை விட எதிர்புகள் தான் தெரிவித்து வருகின்றனர். பின்னணி பாடகி சின்மயி கூட இந்த விவாகரத்தில் அபிராமிக்கு எதிராக பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் சனம் ஷெட்டியும் இந்த விவகாரம் குறித்து சூசகமாக அபிராமியை விமர்சித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு பாடம் சொல்லித்தர அவசியம் இல்லை.

தங்களுக்கு நடந்துள்ள கொடுமைக்கு எதிராக போராட அவர்களுக்கு தைரியம் மட்டும் தான் தேவை. அது அவர்களுக்கு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக துணை நிற்கவில்லை என்றால் அமைதியாக ஒரு ஓரமாக உக்காருங்க. உண்மை வெளியில் வரட்டும். சனம் ஷெட்டி இந்த பதிவில் அபிராமியின் பெயரை குறிப்பிட்டவில்லை என்றாலும், சனம் ஷெட்டியின் இந்த பதிவு அபிராமியை குறிப்பிட்டு தான் போடப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து அபிராமியின் வீடியோக்களை நேரடியாக பகிர்ந்து அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார் சனம்.

-விளம்பரம்-

இந்த வகையில் அபிராமி கலாக்ஷேத்ரா என்ற பெயரை உச்சரிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் அதன் மீது பிழை சொல்கிறார்கள் என்று கலாக்ஷேத்ரா ஆசிரியர்களுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கும் சனம் செட்டி ‘ இது ஆணவம் மற்றும் அறியாமை இல்லை என்றால் பேசாமல் இருங்க உங்களுக்கு எதுவும் மறக்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு நடக்காது என்பதில் அர்த்தம் கிடையாது. 80 ஆண்டுகளாக நீங்கள் அங்கே இருந்தீர்களா ?

அங்கு இருக்கும் அனைத்து ஆசிரியர்களின் நடவடிக்கைகளும் உங்களுக்கு தெரியுமா ஏன் இப்படி ஒரு தலைபட்சமாக இருக்கிறீர்கள் உண்மை வெளிவரும் வரை காத்திருங்கள்அந்த வகையில் அபிராமி கொடுத்த அந்த பேட்டியில் ‘ஹரி பத்மன் மாணவிகளை பாலியல் தொல்லை செய்தார் என்று இவ்வளவு பேசுகிறர ஆசிரியர்களே எங்களையும் மோசமாக கேலி செய்து இருக்கிறார்கள். நானும் அதை எதிர்கொண்டு இருக்கிறேன்’ என்று சொல்ல, அருகில் இருந்த அவரின் தோழி அமைதி அமைதி என்று அபிராமியை அமைதிப்படுத்தினார்.

இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கும் சனம் ஷெட்டி ‘என் வழக்கை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் இவரும் பொறுமைகளுக்கும் ஆசிரியர்களின் கையாலுதலுக்கும் ஆளாகி இருபதாக ஒப்புக்கொண்டார். இது அப்பவே சொல்லி இருக்கலாமே டைம் வேஸ்ட் ஆயிடுச்சு இவங்களே இப்போ புது கம்ப்ளைன்ட் கொடுக்குறாங்க’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement