விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி நான்கு வாரம் முடிந்து 34 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.
Kadanthu Vantha Paadhai #Soundariya
— Dᴀᴠɪᴅ Aᴅᴀᴍ CVF (@David_AdamCVF) November 8, 2024
School la irunthey enoda voice vachu ellam enna bully panuvanga
Na earn pana full amt phone call scam
la poiduchu #BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8 #Soundarya #BiggBossTamil
pic.twitter.com/lZRc8ALTEY
மேலும், நிகழ்ச்சியை சுவராசியமாக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது போட்டியாளர்களுக்குள் சண்டை, போட்டி, பொறாமை, கலாட்டா கலவரம் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாருக்குமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்கள்.
கடந்து வந்த பாதை டாஸ்க்:
அதில் சௌந்தர்யா, நான் எட்டு வருடமாக மாடலிங், நடிப்பு மூலம் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த 17 லட்சம் ரூபாய் ஒரே ஒரு போன் காலில் போய்விட்டது. என்னை மிரட்டி அந்த பணத்தை வாங்கினார்கள். எனக்கு ஒரு போன் வந்தது. அதில், உங்க போனை நாங்கள் ஹேக் செய்து விட்டோம். நீங்கள் இப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறீங்க. உங்களைப் பற்றி நாங்கள் தவறாக செய்திகளை வெளியிடுவோம். உங்களுடைய பெயரை கெடுக்க எங்களுக்கு ஒரு நொடி போதும். நாங்கள் அப்படி எல்லாம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் கொடுக்கணும் என்றெல்லாம் மிரட்டினார்கள்.
#BiggBossTamil8 – Clarification from #Soundariya's side regarding the 17 lakh scam 😲
— Happy Sharing By Dks (@Dksview) November 8, 2024
Scam 🗓️ 27th Aug'24
Total Amount 💰 17,57,888#Soundarya pic.twitter.com/bJKPn6vP1q
சௌந்தர்யா சொன்னது:
எனக்கு என்ன பண்ணனும்னே தெரியவில்லை. உடனே பயத்தில் நான் பணத்தை கொடுத்து விட்டேன். அதிலும் நீங்க யாருக்கும் மெசேஜ் அனுப்பியோ, கால் பண்ணியோ சொல்லக்கூடாது. ஒரு நிமிடத்திற்குள் எங்களுக்கு பணம் வரணும் என்று சொன்னதால் நான் என்னை அறியாமலேயே அதை செய்து விட்டேன். அதுவும் போன மாதம் தான் நான் பணத்தை கொடுத்து ஏமாந்தேன். அந்த மன அழுத்தத்தில் இருக்கும் போது தான் எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கூட என்னுடைய அப்பாவிடம் கடன் வாங்கிக் கொண்டுதான் நான் வந்தேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருந்தார்.
நெட்டிசன்கள் கருத்து:
இப்படி இவர் பேசியிருந்தது தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாகி இருக்கிறது. இதற்கு பலரும், எப்படி இவர் ஆன்லைனில் ஏமாந்தார்? இது நம்பும்படியாக இல்லை, உருட்டு உருட்டு என்று விமர்சித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பிக் பாஸ் சனம் செட்டி பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், சௌந்தர்யா யாராலும் ஏமாற்றப்படவில்லை. அவள் தான் ஏமாந்து இருக்கிறார். ஒரு நபர் மிரட்டி பணம் கேட்கிறார் என்றால் உடனே பணத்தை அனுப்புகிறார். இவர் எந்த தப்பை மறைப்பதற்காக இப்படி படத்தை கொடுத்தாரோ? அதோடு இவர் போலீசிடமும் கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்கவில்லை.
Please understand many kind of scams are going around. Instead of criticising, we should appreciate people who comes out & share their stories, so that others can learn from it.#Soundariya #Soundarya#BiggBossTamil8#BiggBossTamilSeason8#BiggBossTamilpic.twitter.com/gxn6375Fn5 https://t.co/jtk1khLpWA
— Kaashmora (@haloo_kaashmora) November 8, 2024
சனம் ஷெட்டி பதிவு:
வீட்டிலும் இதைப் பற்றி பேசாமல் சௌந்தர்யா அவசரமாக முடிவெடுப்பதற்கு என்ன காரணம்? என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு சௌந்தர்யாவின் குடும்பத்தார், சௌந்தர்யா செய்த தப்பை யாரும் செய்யாதீர்கள். சௌந்தர்யா 17 லட்சம் ஆன்லைன் மூலம் ஏமாந்தது உண்மைதான். உங்களுக்கு ஏதாவது மிரட்டல் போன் கால் மூலம் வந்தால், தொந்தரவுகள் வந்தால் வீட்டில் இருப்பவர்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள். யாருக்கும் பயந்து சௌந்தர்யா செய்த தப்பை செய்து விடாதீர்கள் என்று அவர் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த பதிவையுமே ஷேர் செய்து இருக்கிறார்கள்.