கர்ணன் படத்தை பார்த்துவிட்டு Ips அதிகாரி விஜயகுமார் போட்ட பதிவு வைரல். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
321347
karnan
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-
karnan

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : கொரோனா இருக்கையில் தான் நடித்த படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற நிவேதா தாமஸ் – போலீசில் புகார்அளித்த நெட்டிசன்கள். அவரின் விளக்கம் இதோ.

- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படம், தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. கர்ணன் படத்தை பார்த்துவிட்டு பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் கர்ணன் படத்தை பார்த்து ரசித்த திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் ஐபிஎஸ், படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர் “கர்ணன்… நியாயமற்ற அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுகிறான். பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் சக்திவாய்ந்த படம். கர்ணன் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம்” என குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement