வீரம், ஜில்லா பஞ்சாயத்தில் சிக்கிய சங்கத்தமிழன்.. தீபாவளி ரிலீஸில் சிக்கல்..

0
18227
sangatamilan
- Advertisement -

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள “சங்கத் தமிழன்” படம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி, ராஷிகன்னா, நிவேதாபெத்துராஜ், நாசர், சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜயா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். இந்த படத்துக்கு விவேக்-மெர்வின் அவர்கள் இசையமைத்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து நிலையில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் விநியோக உரிமையை லிப்ரா நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் சங்கத்தமிழன் படத்தை தீபாவளி அன்று வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்கள் படக்குழு. மேலும், அதற்கான வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.

Image result for sangathamizhan

இதற்கிடையே அஜித் அவர்களின் வீரம் படத்தின் மூலம் சங்கத்தமிழன் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியானது. ஏனென்றால் சங்கத்தமிழன் படத்தை தயாரித்த விஜயா புரொடக்ஷன் தான் வீரம் படத்தையும் தயாரித்து உள்ளது. அப்படி என்ன? வீரம் படத்தில் பிரச்சினை ஏற்பட்டது என்று பார்த்தால்… பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித், விஜய் இவர்களின் நடிப்பில் உருவான படம் ஒன்றாக ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியிட்டார்கள். அது ‘ஜில்லா, வீரம்’ படம் தான். இந்த இரண்டு படங்களுமே அப்போது சிக்கலை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஜில்லா படத்தை வாங்கியவர்களுக்கு வீரம் படத்தினால் நஷ்டம். வீரம் படத்தை வாங்கியவர்களுக்கு ஜில்லா படத்தினால் நஷ்டம் என கூறி வந்தார்கள். ஆனால் ,படத்தின் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தான். படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய தியேட்டர் உரிமையாளர்களுக்கு தான் அதிக நஷ்டம் என தெரிய வந்தது. அந்த சமயத்தில் தான் தமிழக அரசு படத்திற்கான வரிச்சலுகை குறித்து கூறிருந்தார்கள்.

- Advertisement -

மேலும், இரண்டு படங்களில் ஒரு படத்திற்கு கொடுத்து விட்டு இன்னொரு படத்திற்கு கொடுக்காமல் இருக்க முடியாது என்பதால் இரண்டு படங்களுக்குமே தமிழக அரசு வரிச்சலுகை வழங்க வில்லை. ஆனால், விநியோகஸ்தர்களும் வரிச்சலுகை கிடைக்கும் என ஆவலாக இருந்தார்கள். மேலும், வரி சலுகை கிடைக்கவில்லை என்பதால் ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அவர்கள் 10% பணத்தை உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என்று கூறினார். அது போல் வீரம் படத்தின் தயாரிப்பாளர் விஜயா புரொடக்சனும் 10% எடுத்துக்கொண்டு கொடுங்கள் என்று கூறினார்கள். ஆனால், இவர்கள் அறிவிப்பதற்கு முன்பாகவே சேலம் தியேட்டர் உரிமையாளர் 7ஜி சிவா என்பவர் முழு தொகையையும் வழங்கிவிட்டார்.

Related image

மேலும், அவர் 10% தொகையை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டபோது நான் கண்டிப்பாக தருகிறோம் என்று கூறியது நிறுவனம். மேலும், அவர்கள் தொகையைக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த போது அடுத்த படத்திற்கு நம்ம சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியது. அந்த சமயத்தில்தான் விஜயா புரொடக்சனின் ‘ பைரவா’ படம் வெளிவந்தது. ஆனால், இந்த படம் பெரிய அளவு ஹிட் கொடுத்ததால் விஜயா புரொடக்ஷன் கண்டுகொள்ளவில்லை. அதைப்பற்றி 7ஜி சிவாவும் கேட்கவில்லை. மேலும், இது சம்பந்தமாக புகார் கடிதம் ஒன்றை இணையங்களில் வைரலாக பரவியது.மேலும், தயாரிப்பாளர் சங்கத்துக்கு 7ஜி சிவா என்பவர்கள் வீரம் சமயத்தில் கொடுக்க வேண்டிய தொகையை விஜயா புரொடக்சன் கொடுக்கவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் வெங்கட்ராம ரெட்டி என்பவர்கள் காலமாகி விட்டதால் யார் இதற்கு பொறுப்பு ஏற்க போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த தொகையை கொடுத்தால் மட்டுமே சேலம் ஏரியாவில் சங்கத்தமிழன் படம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்கள். இதனால் தான் சங்கத்தமிழன் படம் தீபாவளி அன்று வெளிவருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது என்று தெரிவித்தார்கள். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

மேலும், விஜய்யின் பைரவா படம் வரும் போது இந்த பிரச்சனை குறித்து வாய் திறக்காதது ஏன் என்று லிப்ரா ப்ரொடக்ஷன் தயரிப்பாளர் ரவீந்தரன் மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார், அந்த விடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், சங்கத் தமிழின் திரைப்படம் பிகில் படத்திற்கு போட்டியாக வரக்கூடாது என்பதர்க்காக சதி செய்யபட்டு வருவதாகவும் சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. விஜய் சேதுபதி திரைப்படம் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பது புதிதான விஷயமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement