சல்மான் கானின் காதல் கதை பற்றிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக களமிறங்கி இருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பல ஆண்டு காலமாக சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
சல்மான்கான் காதல் கதைகள்:
இப்படி இவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்தார் என்று சொல்லலாம். பாலிவுட்டில் திருமணம் செய்யாமல் இருக்கும் ஹீரோ என்று கேட்டால் அனைவரும் சல்மான்கான் பெயரை தான் சொல்வார்கள். சல்மான்கான் அவர்கள் முதலில் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து வந்தார். ஆனால், அந்த காதல் சேரவில்லை என்று தான் சொல்லணும். பிறகு ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

சல்மான் கான் பற்றிய தகவல்:
ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு நடிகை கத்ரீனா கைஃப் உட்பட பலருடன் சல்மான்கான் காதலித்து இருந்தார். ஆனால், அந்த காதலும் கைகூடவில்லை. அதன் பின் கத்ரீனா, நடிகர் விக்கி கெஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதற்குப்பின் சல்மான் கான் அவர்கள் சங்கீதா பிஜ்லானி என்பவரை எட்டு ஆண்டுகளாக காதலித்து இருந்தார். ஆனால், இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்போது வரையும் இருவருமே நல்ல நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.

சங்கீதா பிஜ்லானி-சல்மான் கான்:
சல்மான் கான் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலுமே சங்கீதா பிஜ்லானி கலந்து கொள்கிறார். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையில் நட்பு ரீதியாக பழக்கமிருக்கிறது. தற்போது சல்மான்கான் வெளிநாட்டு பெண்ணான யூலியா என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. அந்த பெண் தற்போது மும்பையில் தான் இருக்கிறாராம். இப்படி இருக்கும் நிலையில் சல்மான்கான்-சங்கீதா பிஜ்லானி திருமணம் நடக்காத காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார்கள்.

திருமணம் பற்றி சொன்னது:
திருமண அழைப்பிதழ் கூட அச்சடித்து இருந்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில் இவருடைய திருமணம் நின்று போனது. இது குறித்து கூட அளித்த பேட்டியில் சங்கீதா, எனக்கும் சல்மான் கானுக்கும் கல்யாணம் நின்றது உண்மைதான் என்று கூறியிருந்தார். இதற்கு காரணம் இவர்களின் வாழ்க்கையில் பாகிஸ்தான் நடிகை சோனியா அலி வந்தது தான் என்று கூறப்பட்டது. அதற்குப்பின் சங்கீதா கிரிக்கெட் வீரர் அசாருதீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்து 14 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அதற்குப்பின் இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்தார்கள். விவாகரத்திற்கு பிறகு
சங்கீதா மும்பைக்கு வந்துவிட்டார். தற்போது சல்மான்-சங்கீதா நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.






