அதுக்கு அப்புறம் நான் Anchoring-ஏ Stop பண்ணிட்டேன் – பல ஆண்டுக்கு முன் சூர்யா குறித்து பேசிய சர்ச்சை குறித்து அழகு சீரியல் நடிகை.

0
601
sangeetha
- Advertisement -

ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவரும் நா காணும் காலங்கள் சீசன் 2 மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் விஜே சங்கீதா அவர் தொகுப்பாளராக இருந்து செய்தி வாசிப்பாளர், சீரியலில் நடித்து அதன் பின்பு வெள்ளித்திரை சென்றவர் சங்கீதா. மதுரையில் பிறந்தவர் தன் கல்லூரி வாழ்க்கையும் மதுரையிலேயே முடித்து விட்டு. சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை கிடைத்து வேலைக்காக வந்தவர் பின்பு சலிப்பான ஐடி கம்பெனி வேலையை விட்டுவிட்டு சன் மியூசிக் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கிவிட்டார் இவர் சன் மியூசிக்கில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், 24 பிரேம்ஸ், லேடிஸ் சாய்ஸ், பிராங்கா சொல்லட்டா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

-விளம்பரம்-

பின்பு சந்தோஷமாக சன் மியூசிக்கில் தொகுப்பாளராக வலம் வந்த சங்கீதாவிற்கு அப்பொழுது தெரியாது நாம் விரைவில் தொகுப்பாளராக இருந்து விலகப் போகிறோம் என்று. ஆம், சன் மியூசிக்கில் அவர் தொகுத்து வழங்கிய பிராங்கா சொல்லட்டா என்ற நிகழ்ச்சியில் எப்போதும் போல தொடங்க கே.வி.ஆனந்த் அவர்கள் படத்தில் சூர்யா நடிக்க இருந்தார். இந்த படத்தில் அமிதாப்பச்சனை நடிப்பதற்கு குழுவினர் அணுகியதாகவும் சொல்லப்பட்டது. அப்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த விஜே சங்கீதா, நிவேதா இருவரும் சூர்யா அவர்கள் அனுஷ்கா கூட நடிக்கும் பொழுதே ஹீல்ஸ் அணிந்து நடித்தார். அமிதாப்பச்சனுடன் நடிக்கிறார் என்றால் ஸ்டுல் போட்டு தான் நடிக்க வேண்டும் என்று காமெடியாக பேசி இருந்தார்கள்.

- Advertisement -

கொந்தளித்த திரை பிரபலங்கள் :-

பின்பு படம் முழுவதும் அமர்ந்தபடியே அவரை நடிக்க வைத்தால் அமிதாப் பச்சனின் உயரத்திற்கு செட்டாகும் என்றபடி பேசியிருந்தார். சூர்யாவை இப்படி கலாய்த்தார்கள் இதனால் தமிழ் திரையுலகில் பலரும் கொந்தளித்தனர் நடிகர் விஷால் ஹியூமர் பண்ணுவதாக நினைத்து சென்சே இல்லாமல் பண்ணாதீர்கள் எனவும் விக்னேஷ் சிவன் சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய பிரபலமும் அவர் தன்னுடைய ரசிகர்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார் அவரை இப்படி கலாய்த்து இருக்கிறீர்கள் என்றும் இதுபோன்று பல சினிமா பிரபலங்கள் டூவீடடரில் டூவிட் போட்டு இருந்தனர். இதன் பின்னர் தனது சன் மியூசிக் தொகுப்பாளர் வேலையில் இருந்து விலகிவிட்டார் சங்கீதா.

விளக்கம் கொடுத்த விஜெ சங்கீதா :-

இதற்கு பின்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜே சங்கீதா அவரிடம் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இந்த சம்பவத்தை பற்றி கேட்க அதற்கு பதில் கூறிய விஜெ சங்கீதா ஒரு நிகழ்ச்சி என்பது நாங்கள் மட்டும் நடத்துவது அல்ல அதிலும் பிராங்கா சொல்லட்டா என்ற நிகழ்ச்சி ரெக்கார்ட் பண்ணி டெலிகாஸ்ட் பண்ணும் நிகழ்ச்சி. அதில் எங்களுக்கு எவ்வாறு ஸ்கிரிப்ட் எழுதி தரப்பட்டிருக்கிறதோ அவ்வாறு தான் நாங்கள் பேச முடியும் அந்த சமயத்தில் அந்த ஸ்கிரிப்டில் இருந்தபடியே நாங்கள் பேசி இருந்தோம். இருந்தாலும் இந்த சம்பவத்திற்கு அப்புறம் யாரிடம் ஸ்கிரிப்ட் வாங்கினாலும் படித்துக் கொண்டு சிறு சிறு தவறான விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என புரிந்து கொண்டேன் நான் என விஜய் சங்கீதா கூறியிருந்தார்.

-விளம்பரம்-

வில்லி கேரக்டரில் நடித்த சங்கீதா :-

பின்பு விஜே சங்கீதா சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதன் பின்பு பூர்ணா என்ற கதாபாத்திரத்தில் அழகு சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலில் முதலில் நல்ல கேரக்டராக நடித்தவர் பின்பு வில்லியாக மாற வேண்டி இருந்தது. முதலில் வில்லியாக நடிக்க மனமில்லாமல் நடித்த சங்கீதாவிற்கு ரசிகர்களிடம் அ மிகப்பெரிய வரவேற்பு பெற்றுஇருந்தது. எந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது என்றால் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்திற்காக சன் டிவி சார்பில் நடத்தப்பட்ட சன் குடும்ப விருதுகளில் சிறந்த வில்லிக்கான விருதை சங்கீதா வாங்கி இருந்தார்.

சங்கீதா நடித்த திரை படங்கள் :-

அதன் பின்பு விஜெ சங்கீதா சீரியலில் வில்லி கேரக்டர்களிலும் நடிக்க தொடங்கிய சங்கீதா முதலில் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் என்ற படத்தில் நடித்தார். பின்பு திரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் என்ற படத்தில் நடித்தார். அப்புறம் சீரியலிலும் திரைப்படங்களிலும் கலக்கி வந்தார். இப்போது அன்பே வா சீரியலில் பிரபல வில்லியாக முழுமனதாக நடித்துக் கொண்டிருக்கும் சங்கீதா அவர் தனது தொகுப்பாளர் வேலையை மிகவும் மிஸ் பண்ணுவதாக சமீபத்தில் கூறி இருந்தார். இப்பொழுது கனா காணும் காலங்கள் சீசன் 2வில் மலர் டீச்சர் என்னும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு இந்த தொடரில் தன் நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

Advertisement