இளைய தளபதினா செம க்யூட்டா இருப்பாரு..! பிரபல நடிகை புகழாரம்..! சொன்னது எந்த நடிகை தெரியுமா.?

0
267

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அத்தோடு தமிழ் சினிமா துறையை தாண்டி மற்ற மொழிகளிலும் இருக்கும் நடிகர் நடிகைளுக்கும் விஜய் என்றால் அவ்வளவு பிடிக்கும் அந்த வகையில் பிரபல கன்னட நடிகையான சஞ்சனா கல்ரானி, நடிகர் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Sanjana-Galrani

கன்னடத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஒரு காதல் செய்வீர் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்னர் வேறு தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். இதுவரை 45 படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சனா, தற்போது சீரியலில் நடித்து வருகிறார். அதுவும் அந்த சீரியலின் பெயர் என்ன தெரியுமா”இளையதளபதி ”

இந்த சீரியலை ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் வேறு யாரும் இல்லை தெலுங்கில் “பாகுபலி” என்ற பிரமாண்ட படத்தை தயாரித்த நிறுவனம் தான். தற்போது பாகுபலி போன்றே ஒரு பிரமாண்டமான தொலைக்காட்சி சீரியல் தொடரை தயாரித்து வருகிறது. தெலுகு, தமிழ் என்று பல மொழிகளில் தயாராகிவரும் இந்த சீரியலுக்கு தமிழில் “இளையதளபதி” என்று பெயர் வைத்துள்ளனர். இந்த தொடர் களர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

Sanjanaa-Galrani

சமீபத்தில் இந்த தொடரில் நடித்துள்ளது குறித்து பேட்டியளித்த நடிகை சஞ்சனா, இந்த தொடரில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார். அதுவும் இந்த தொடருக்கு இளையதளபதி என்று தலைப்பு வைத்துள்ளாதால் நடிகர் விஜய் குறித்தும் கேள்விகேட்டபட்டது. அதற்கு பதிலளித்த நடிகை சஞ்சனா, அவர் மிகவும் க்யூட்டாக இருப்பார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் அவர் மிகவும் ஹண்ட்சமாக இருக்கிறார். நான் அவரை ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் சந்தித்துள்ளேன், அவர் மிகவும் தன்னடக்குதடன் இருக்கும் ஒரு நபர் என்று கூறியுள்ளார்.