காலம் காலமாகவே நடிகர்கள் தங்களுடைய வாரிசுகளை சினிமா உலகிற்கு கொண்டு வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சந்தான பாரதி. தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சந்தான பாரதி. இவர் 1986 ஆம் ஆண்டு ‘என்னுயிர் கண்ணம்மா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதோடு இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனரும் ஆவார். இவருடைய பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், இவருடைய மகன் சஞ்சய் பாரதி. சஞ்சய் பாரதி முதலில் ஏ.எல்.விஜயிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். தற்போது நடிகர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி அவர்கள் இயக்குனராக களம் இறங்கி உள்ளார். சஞ்சய் பாரதி அவர்கள் “தனுஷ் ராசி நேயர்கள்” என்ற படத்தை தான் இயக்கி இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் ‘பியார் பிரேமா காதல்’ படம் ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் நடித்து உள்ளார். இவர் ஜன்னல் ஓரம், ஜீவா, மாஸ், கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் சஞ்சய் பாரதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்த கொண்ட பழைய போட்டோவை பகிர்ந்துள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நடிகர்கள், நடிகைகள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலை, சமையல் செய்வது போன்ற பல வேலைகளை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
மேலும், வீட்டில் இருப்பதால் தங்களுடைய பழைய புகைப்படங்களை எல்லாம் பிரபலங்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு தனது கல்லுரியில் நடந்த மெமரீஸை பகிர்ந்து உள்ளார் இயக்குனர் சஞ்சய் பாரதி. அதில் அவர் தளபதி விஜய்யுடன் தனது கல்லூரி நிகழ்ச்சியில் எடுத்த போட்டோவை பகிர்ந்து உள்ளார்.
புகைப்படத்தை பதிவிட்டு அவர் கூறியது, இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். அந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய்க்கு முன்னால் நான் நடனமாடினேன். மகழ்ச்சியாக இருந்தது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் இதை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.