இயக்கத்தின் சிகரம் ஆன ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதிலும் இதுவரை பார்க்காத மிக பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. பாகுபலியின் வெற்றியை பார்த்து பாலிவுட்டே மிரண்டது. பாகுபலி படம் ரிலீஸாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.
பாகுபலி படம் மூலம் பிரபாஸ் மட்டும் அல்ல அதில் நடித்த அனைவருமே நாடு முழுவதும் பிரபலமானார்கள். முதல் பாகத்தில் கட்டப்பா சத்யராஜ் தான் பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள். மேலும், இந்த படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்திம் தான் ஹைலைட் என்றே சொல்லலாம். கட்டப்பா கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. கட்டப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து இருந்தார்.
இந்நிலையில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல பாலிவுட் நடிகராம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை நடிக்க வைக்க தான் இயக்குனர் ராஜமௌலி திட்டமிட்டு இருந்தார். ஆனால், அப்போது நடிகர் சஞ்சய் தத் சிறையில் இருந்த காரணத்தினால் சத்யராஜ் தேர்வானார். இதை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜுக்கு எதிர்பாராமல் கிடைத்த கட்டப்பா கதாபாத்திரம் அவரது வாழ்வில் மறக்க முடியாததாக அமைந்தது. அந்த அளவுக்கு இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். இந்த படத்தை பார்த்த அனைவரின் பாராட்டுகளையும் சத்யராஜ் பெற்றார். இதே போல் பல்லா,ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் வேற நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.