ஏர் போர்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சஞ்சீவ் – ஆல்யா ஜோடி. வைரலாகும் வீடியோ. ஆல்யா விளக்கம்.

0
595
- Advertisement -

ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் ஏர்போர்ட்டில் சண்டை போட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். இவர் தமிழில் குளிர் 100 டிகிரி என்ற படத்தில் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் இவருக்கு வெற்றி கொடுக்கவில்லை.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் அதனை தொடர்ந்து இவருக்கு சரியான பட வாய்ப்புகளும் வரவில்லை. இதனால் இவர் சின்னத்திரைக்கு சென்று விட்டார்.. இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ராஜா ராணி சீரியலில் சின்னையா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இவர் காற்றின் மொழி என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.

- Advertisement -

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே சஞ்சீவ் அவர்கள் ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்த ஆல்யா மானசாவை காதலித்தார். இருவரும் அந்த சீரியல் முடிவதற்குள்ளே தங்களுடைய காதலை அறிவித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இதனை எடுத்து ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப்பின் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். ஆல்யா சிறிய இடைவெளிக்கு பிறகு கடுமையாக தன்னுடைய உடல் எடையை குறைத்து சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர்கள் இருவரும் youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார்கள். அதில் அவர்கள் தங்கள் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதனால் இவர்களை எக்கச்சக்கமான ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் சஞ்சீவ் பகிர்ந்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுகிறது. அதாவது, சஞ்சீவ், ஆல்யாவும் பிரபல நிறுவனம் நடத்தும் விமானத்தில் வெளியூர் செல்ல டிக்கெட் வாங்கி இருக்கின்றனர். ஆனால், 9 மணி நேரத்திற்கு மேலாகியும் விமானம் வரவில்லை.

இது குறித்து பயணிகள் பலருமே கேள்வி எழுப்பியிருந்தார்கள். அந்த நிறுவனமும் சமாளித்து இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் விமானத்திற்காக காத்திருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்திருக்கிறார். இதனால் கடுப்பான சஞ்சீவ் மற்றும் பிற பயணிகளும் விமான நிறுவன ஊழியர்களுடன் சண்டைக்கு சென்றிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இதை வீடியோவாக சஞ்சீவ் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இனி ஏர் ஏசியா நிறுவனத்தில் பயணம் செல்லாதீர்கள். அவர்கள் தங்களுடைய கடமையை செய்யாமல் பொறுப்பேற்ற முறையில் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement