தாங்கள் வைத்திருந்த 50 லட்ச ரூபாய் சொகுசு காரை கிப்டாகா தூக்கி கொடுத்த சஞ்சீவ் – ஆல்யா, யாருக்கு பாருங்க.

0
1066
Alya
- Advertisement -

சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த ஆண்டுக்கு முன் தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

-விளம்பரம்-

இவர்களுடைய குழந்தையின் பெயர் அய்லா. பின் குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வருகிறார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார். இதனிடையே இவர்கள் இருவருமே எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்கள். அடிக்கடி தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்கள்.

- Advertisement -

சீரியலில் ஆல்யா விலக காரணம் :

இப்படி ஒரு நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை சோசியல் மீடியாவில் சஞ்சீவ் தெரிவித்திருந்தார். இப்படி இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தாலும் ஆல்யா தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். அதே போல ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகப்போபவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு ஆல்யா மானஸாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்து இருந்தார். மேலும், ஆல்யா மானஸாவிற்கு இந்த மாதம் குழந்தை பெற இருப்பதால் அவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

sanjeev

சீரியலில் நடிக்கும் புது நடிகை:

தற்போது ஆல்யாவிற்கு பதிலாக இந்த தொடரில் சந்தியாவாக ரியா விசுவநாதன் நடிக்க இருக்கிறார். இவர் சென்னையை சேர்ந்த மாடல். இந்த தொடரின் மூலம் தான் இவர் சீரியலுக்கு அறிமுகமாக இருக்கிறார். மேலும், பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் நண்பர் தான் ரியா என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆலியா மானசா இந்த சீரியலில் இருந்து விலகியது தற்காலிகமான ஒன்று தான். அவர் மீண்டும் கண்டிப்பாக சீரியலில் இணைவார். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மேலும், இந்த மாத இறுதியில் புது வரவை எண்ணி ஆலியா மானசாவின் குடும்பத்தினர் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

சொகுசு கார் வாங்கிய விஜய் டிவி பிரபலங்கள்:

அதோடு கூடிய விரைவில் ஆலியா மானசா வளைகாப்பு நடக்கிறது. இந்நிலையில் சஞ்சீவ் சொகுசு காரை கிப்ட் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை பிரபலங்கள் சொகுசு காரை வாங்கி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதிலும் விஜய் டிவி பிரபலங்களான மணிமேகலை, சரத், சிவாங்கி, மகேஷ், தாடி பாலாஜி, சித்து-ஸ்ரேயா, சரண்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் கார் வாங்கி அதனுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள்.

சஞ்சீவ் தன் சகோதரருக்கு கொடுத்த கிப்ட்:

அந்த வகையில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா ஆகிய இருவரும் பல சொகுசு கார்களை வைத்திருக்கின்றனர். கடந்த வருடம் கூட சஞ்சீவ் தன்னுடைய மகளின் பிறந்த நாளுக்கு ஒரு காரை கிப்ட் செய்திருந்தார். இந்த நிலையில் சஞ்சீவ் தான் ஏற்கனவே வைத்திருந்த Mercedes C- class என்ற 50 லட்ச ரூபாய் காரை தனது சகோதரருக்கு கிப்ட்டாக கொடுத்திருக்கிறார். இதை தான் தற்போது சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் சஞ்சீவ் மகள் அய்லா, அவருடைய சகோதரர் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

Advertisement