சஞ்சீவ், மானஸா காதல், முதலில் காதலை சொன்னது யார்..!அந்த கொடுமையை நீங்களே பாருங்க..!

0
1678
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.

-விளம்பரம்-

Alyamanasa sanjeev

- Advertisement -

மானஸா நீண்ட வருடங்களாக மானஸ் என்பவரை காதலித்து வந்தார்.மானஸா மற்றும் மானஸ் ஆகியோர் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் பிரிந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் தற்போது ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் தற்போது சுபிக்ஷா என்பவரை காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு காரணமே ராஜா ராணி, சீரியலில் நடித்து வரும் சஞ்ஜீவ் தான். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து வந்ததால் தான் மானஸை பிரிந்ததாக பலரும் கூறிவந்தனர்.இந்நிலையில் நடிகை மானஸா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சீவுடனான காதலை உறுதி செய்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சஞ்சீவ் மற்றும் மாஸாவிடம் முதலில் காதலை வெளிப்படுத்தியது யார் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு சஞ்சீவ், மானஸா தான் என்று கூறியுள்ளார். அதுபோக சஞ்சீவ் மானஸாவை செல்லமாக ஆளு என்றும் மானஸா, சாஞ்ஜீவை பிள்ளையார் என்றும் தான் செல்லமாக அழைப்பார்கள் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் மானஸாவின் முன்னாள் காதலரான மானஸிடம் கூட மானஸா தான் முதலில் காதலை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement