‘இந்த சீரியல்லையும் விஜய்ய விடலையா நீ’ – லட்சுமி தொடரிலும் விஜய் வசனத்தை பேசி கடுப்பேற்றிய சஞ்சீவ்.

0
205
- Advertisement -

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் விஜய் வசனத்தையே ரீ-கிரியேட் செய்துள்ளார் சின்னத்திரை தளபதி சஞ்சீவ். சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் சஞ்சீவ். இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்தது தான். இவர் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.அதன்பின்னர் சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

நீண்ட வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தார் சஞ்சீவ். மேலும், இவர் சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பிரபலம் தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் தான் சஞ்சீவ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் இவர் ஹீரோவாக நடித்து இருந்தார்.

- Advertisement -

சஞ்சீவ் குறித்த தகவல்:

இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். மேலும், இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கிழக்கு வாசல் சீரியல்:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சஞ்சீவ் கமிட்டான தொடர் கிழக்கு வாசல். இந்த தொடர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆரம்பத்தில் இந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவி தான் கமிட்டாகி இருந்தார். அது தொடர்பான பூஜைகளும் கலந்திருந்தார். ஆனால், திடீரென்று அந்த தொடரில் இருந்து விலகி விட்டதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சஞ்சீவ் கமிட்டாகி இருக்கும் சீரியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

-விளம்பரம்-

சஞ்சீவ் நடிக்கும் சீரியல்:

அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் வானத்தைப்போல தொடரில் தான் நடிகர் சஞ்சீவ் அவர்கள் வீரசிங்கம் என்ற போலீஸ் கேமியோ ரோலில் நடிக்கிறார். அதிலும் இந்த படத்தில் தெறி விஜய் மேனரிசத்தை அப்படியே காப்பி அடித்து வருவதை விஜய் ரசிகர்கள் அடிக்கடி கேலி செய்து வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொடர்ந்து விஜய் பெயரை பயன்படுத்திய சஞ்சீவ் தற்போது சீரியலிலும் விஜய் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்.

தெறி பட ரீ-கிரியேஷன் :

தளபதி பெயரை பயன்படுத்தி இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது லட்சுமி தொடரில் நடித்து வரும் சஞ்சீவ் தெறி படத்தின் ஒரு காட்சியில் சமந்தா மற்றும் விஜய் இருவரும் பேருந்தில் பேசும் ஒரு அழகான காட்சியில் வரும் வசனத்தை சீரியல் நடிகை ஸ்ருதியுடன் சேர்ந்து ரீ-கிரியேட் செய்துள்ளார் சஞ்சீவ். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகிண்டனர்.

சஞ்சீவ் பதிலடி :

இப்படி ஒரு நிலையில் பேட்டி பேட்டி ஒன்றில் பங்கேற்ற சஞ்சீவ் ‘இந்த கதாபாத்திரத்தை நான்தான் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ தான் சொன்னான் ஆனால் அந்த கதாபாத்திரத்தை ஓவராக பில்டப் செய்து எடுத்து விட்டார்கள் அதை நிறைய பேர் வரவேற்றார்கள் நிறைய பேர் ஏறியும் செய்தார்கள். கேலி செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் ஆனால் நான் சிம்பு மாதிரி வளர்ந்து கொண்டு தான்’ என்று கூறியுள்ளார்.

Advertisement