கொரோனா அச்சத்தில் இருந்துள்ள சஞ்சீவ் – நேரில் சென்று விஜய் செய்துள்ள உதவி.

0
1453
Vijay
- Advertisement -

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான வனிதா பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். மேலும், வனிதா விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதேபோல நடிகை வனிதா அறிமுகமான இதே படத்தில் விஜய்யின் நண்பராக நடித்த சஞ்சீவ் கூட வனிதாவுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

-விளம்பரம்-

நடிகர் சஞ்சீவ் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் அறிமுகமானார் அதன்பின்னர் சந்திரலேகா நிலாவே வா பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் சஞ்சீவ்.

- Advertisement -

என்னதான் விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்றாலும் விஜயிடம் இதுவரை தொழில் ரீதியாக எந்த ஒரு உதவியையும் கேட்டதில்லை சஞ்சீவ். ஆனால், நட்பு ரீதியில் கேட்காமல் பல உதவிகளை செய்துள்ளாராம் விஜய். அந்த வகையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சஞ்சீவ் பேசுகையில், இந்த ஆறு மாதத்தில் விஜய்யை நான் ஒரு முறைதான் சந்தித்து இருப்பேன். ஒருமுறை எனக்கு கொரோனா வந்துவிட்டது என்று அச்சத்தில் இருந்தேன் அதனால் மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டேன்.

வீட்டில் நான் தனியாகத்தான் இருந்தேன் அப்போது விஜய் எனக்கு கால் செய்து என்னாச்சு என்று விசாரித்தான். நான் எனக்கு கொரோனா இருக்கும் என்ற பயமாக இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு அவன் டெஸ்ட் செஞ்சியா? என்று கேட்டான் அதற்கு நான் இல்லை என்று சொனேன். பின்னர் சாப்பிட்டியா என்று கேட்டான் அதற்கு இல்லை இனிமேல் தான் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து ஏதாவது சமைக்க வேண்டும் என்று சொன்னேன். பின்னர் ஒரு பதினைந்து நிமிடத்தில் மீண்டும் போன் செய்து கீழே தான் இருக்கிறேன் வா என்று சொன்னான். நான் மேலே இருந்து எட்டிப் பார்த்து இல்லை எனக்கு பயமாக இருக்கிறது நான் மாஸ் கூட போடவில்லை நான் எப்படி கீழே வருவேன் என்று சொன்னேன். நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன் வா என்று சொன்னான். நான் கீழே வர மறுத்ததால் பின்னர் அங்கு இருந்த வாட்ச்மேனை அழைத்து சாப்பாடு கொடுத்து விட்டு சென்று விட்டான் என்று கூறியுள்ளார் சஞ்சீவ்.

-விளம்பரம்-
Advertisement