தலை முடியால் வந்த வினை, மீண்டும் போதை பொருள் விவகாரத்தில் சிக்கிய நிக்கி கல்ராணி சகோதரி.

0
1217
- Advertisement -

கடந்த ஆண்டு கன்னட திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல கன்னட நடிகையும் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. போதை பொருட்களை கன்னட சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் கூட பயன்படுத்தியதாகவும் கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும் போதை பொருள் பயன்படுத்தும் 15 நடிகர் நடிகைகளில் பெயரையும் அவர் போலீசாரிடம் கொடுத்தார்.

-விளம்பரம்-

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.பல்வேறு கன்னட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த போதை பொருள் விவகாரத்தில் தொடர்ப்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும், பல்வேறு நடிகர் நடிகைகளிடம் சோதனை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் தமிழில் நிமிர்ந்த நில் படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார்.

இதையும் பாருங்க : ‘எல்லாரும் உன்ன ஜாதி வெறியன்னு முத்திரை குத்திஇருக்காங்க’ – வெளியான ருத்ர தாண்டவம் ட்ரைலர்.

- Advertisement -

அவரிடம் நடத்திய விசாரணையில் கன்னட திரை உலகில் நடக்கும் பார்ட்டிகளுக்கு போதை பொருள் சப்லை செய்யப்படுவதாக தெரியவந்தது. இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியும் இந்த போதை பொருள் விவாகரத்தில் சம்மந்தபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார். சஞ்சனா மற்றும் ராகினி இருவரும் கைது செய்யப்பட்டு நான்கு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறைவாசத்திற்கு பிறகு அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.

இப்படி ஒரு நிலையில்  இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்பதை கண்டறிய, அவர்களது தலைமுடி மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்த‌தில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் இவர்கள் சிறை செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement