ஆர்யா- சயிஷா திருமணம்.! மேடையில் கலாய்த்த சந்தானம்.! என்ன சொன்னார் ?

0
1037

கடந்த சில மாதங்களாக ஆர்யா மற்றும் சயீஷா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக ஆர்யா மற்றும் சயீஷாவின் திருமணம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்யா- சயிஷா திருமணம் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் வெளிவாகி வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சந்தானம், ஆர்யா குறித்து ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் பிரஸ் மீட்டில் கிண்டலடித்துள்ளார் சந்தானம்.

- Advertisement -

இந்த விழாவில் கலந்துகொண்ட சந்தானத்திடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சந்தானம், ’உங்கள் படங்களில் காமெடியனை ஹீரோவாக்குவீர்களா’ எனக் கேட்டபோது, “அப்படி எதுவும் முடிவு பண்ணல. கதை எப்படி அமையுதோ, அதுக்கு யார் செட்டாவாங்களோ அவங்கதான். அப்படி யாரையாவது வச்சு படம் பண்ணணும்னா ஆர்யா தான் என் சாய்ஸ்” என்றார்.

ஆர்யாவுக்கும் சயீஷாவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியைப் பற்றி கேட்டபோது, “அது உண்மைதானான்னு எனக்குத் தெரியல. அவன்கிட்ட இனிதான் அதப்பத்தி கேக்கணும். ஆனா, கல்யாணம் ஆகுற வயசு வந்துட்டா பண்ணிதான ஆகணும்” என நக்கலாகச் சொன்னார்.

-விளம்பரம்-
Advertisement