சிம்பு பற்றி நடிகர் சந்தானம் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியானாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சந்தானம். சந்தானத்தைப் பொறுத்தவரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் தான் பிரபலமடைந்தவர். அதோடு சந்தானத்தை வெள்ளி திரைக்கு அழைத்து வந்தவர் நடிகர் சிம்பு தான். தனது ‘மன்மதன்’ படத்தின் மூலம் சந்தானத்தை சினிமாவில் சிம்பு அறிமுகம் செய்து வைத்தார். அதுமட்டுமில்லாமல், சந்தானத்திற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பேசி சிம்பு வாங்கிக் கொடுத்தார்.

காமெடியனாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சந்தானம் சமீப காலமாக கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு சந்தானம் காமெடியனாக நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியானது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருக்கவேண்டிய இப்படம் சில பிரச்சனைகளால் வெளியாகாமலே இருந்தது. இந்த படம் பொங்கலுக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய படத்தில் சந்தானத்துடன் இணைந்து விஷால், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். குறிப்பாக, இந்த படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தார்கள்.
டிடி நெக்ஸ்ட் லெவல்:
தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்க படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தில் சந்தானம் அண்ட் கோவுடன் கௌதமேனன், செல்வராகவன் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற 16-ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட சந்தானம், தில்லுக்குதுட்டு 1,2, டிடி நெக்ஸ்ட் லெவல் படங்களில் முக்கியமான பங்காக இருந்த இந்திரா சௌந்தரராஜன் சார் இன்று நம்முடன் இல்லை.

பட விழாவில் சந்தானம்:
அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. சிம்பு சார் இங்கு வந்திருக்கிறார். அவர் இல்லைனா நான் இன்னைக்கு இங்கு இல்லை. அவருடைய காதல் அழிவதில்லை படத்தில் தான் நான் சினிமாவில் அறிமுகமானேன். பின்னாடி நிற்கிற ஒருவராக நடித்திருப்பேன். அதில் என்னுடைய நடிப்பை கவனித்த பிறகு அவர் எனக்கு மன்மதன் படத்தில் வாய்ப்பை கொடுத்தார். அந்த படத்தோட முதல் நாள் படப்பிடிப்பில் உங்களுக்கான இன்ட்ரோ சீனில் பில்டப் வைக்கிறோம் என்று சொன்னார். உங்களின் லொள்ளு சபா மக்கள் கிட்ட நல்லா ரீச் ஆகியிருக்கு. மக்கள் கண்டிப்பாக கைதட்டுவாங்க என்றும் சொன்னார்.

சிம்பு பற்றி சொன்னது:
பின் அந்த படத்தில் என்னுடைய பெயர் சொல்ற காட்சியை வைத்தார்கள். அன்னைக்கு எனக்கு கைத்தட்டல் வரும்னு பண்ணியவர். இன்னைக்கும் அதே விஷயத்தை செய்கிறார். ஒவ்வொரு நேரமும் எனக்காக மற்றவர்களிடம் சில விஷயங்கள் யோசிக்க சொல்லுவார். எப்போதுமே அவர் பின்னாடி நான் இருப்பேன். இந்த படத்தோட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்யா என்னுடைய உயிர் நண்பன். ஆர்யா 'சேட்டை' படத்தில் எனக்கு காமெடி சூப்பர் ஸ்டார்னு டைட்டில் வைத்தார். லிங்கா படத்தில் நான் நடிக்கும்போது ரஜினி சார், நீங்க காமெடி சூப்பர் ஸ்டாரா? என்று கேட்டார்.
https://www.youtube.com/watch?v=koNs3J3wmEU
ஆர்யா நட்பு:
நான் அவரிடம் ஆர்யா தான் படத்தில் போட்டான்னு சொன்னேன். உங்களைக் கேட்காமல் போட்டு இருப்பாரான்னா என்று ரஜினி சார் கேட்டார். நான் சமீபத்தில் ஒரு இடம் வாங்கினேன். அங்கு பழைய வீடு ஒன்னு இருந்தது. என்னுடைய அம்மாவும் மனைவியும் வெள்ளிக்கிழமையில் அங்கு போய் விளக்கேத்துவார்கள். அப்படி ஒரு நாள் அந்த வீட்டுக்கு ஆர்யா வந்தார். அவர், வீடு பழையதாக இருக்கு மச்சான். இடிச்சிட்டு புதுசாக கட்டு என்று சொன்னான். அப்புறம் அவனே ஆள் வர வைத்து இடித்தான். அந்த வீடு தரைமட்டமாகிவிட்டது. அடுத்த வாரம் எங்க அம்மா அந்த வீட்டுக்கு விளக்கேற்ற வரும் போது வீட்டைக் காணவில்லை. அப்புறம் தான் இடித்த விஷயத்தை நான் அம்மாவிடம் சொன்னேன். அவங்க படத்தில் தான் இப்படி என்றால் நிஜத்திலும் இப்படித்தான் இருப்பீங்களானு கேட்டார். என்னுடைய படத்தையும் ரசிக்கிற எல்லோருக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.






