சந்தானம் நடித்த சன் டிவி சீரியல், லோக்கல் சேனல் ஆங்கரிங், முதலில் நடித்த படம். பல ஸ்வாரசியமான புகைப்படங்கள்.

0
193
santhanam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்கு நுழைந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமானார்.

-விளம்பரம்-

ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானம் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்க வரும் முன்பு நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்தவர் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் நடிகர் சந்தானம் லொள்ளு சபாவில் இருந்தபோதே ஒரு லோக்கல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார் என்பது பலர் அறிந்திராத விஷயம்.

- Advertisement -

சந்தானத்தின் லோக்கல் சேனல் நிகழ்ச்சி :

ஆம், ‘ரைட்’ என்ற தொலைக்காட்சியில் நடிகர் சந்தானம் நேயர்களுடன் பேசும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து இருக்கிறார். அதே போல படங்களில் நடிப்பதற்க்கு முன்பாக சந்தானம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அண்ணாமலை’ சீரியலிலும் நடித்து இருக்கிறார். அதன் பின்னர் தான் இவர் விஜய் டிவியில் சகல vs ரகள, லொள்ளு சபா போன்ற நிகழ்ச்சியில் நடிக்கத்துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானத்தை சிம்பு தான் சினிமாவில் அறிமுகம் செய்தார் என்று தான் பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

அண்ணாமலை சீரியல்

சந்தானத்தின் முதல் படம் :

சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படம் தான் சந்தானத்தின் முதல் படம் என்று பலர் நினைத்து வருகின்றனர். ஆனால், உண்மையில் அதற்கு முன்பாகவே நடிகர் சந்தானம், குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார் சந்தானம். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தார் சந்தானம்.

-விளம்பரம்-

ஹீரோவாக ஜொலித்து வரும் சந்தானம் :

தொடர்ந்து காமெடி நடிகராக நடித்த சந்தானம் கடந்த சில வாருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஜொலித்து வருகிறார். சந்தானம் இறுதியாக ‘சபாபதி’ படத்தில் நடித்து இருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இந்த படத்திற்கு முன்பாக சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது.

This image has an empty alt attribute; its file name is san.jpg
‘ பேசாத கண்ணும் பேசுமே’

சந்தானத்தின் புதிய படம் :

தற்போது சந்தானம் தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்க்கு இசையமைக்கிறார். இன்று சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

Advertisement