அந்த ஒரு ட்வீட்டுக்காக என்னையும் சங்கினு சொல்லிட்டாங்க – சத்குருவிடம் புலம்பிய சந்தானம். வீடியோ இதோ.

0
1047
- Advertisement -

கடந்த சில திங்களுக்கு முன்னர் ஈஷ யோகா நிறுவனர் சத்குரு கோவில்களை பற்றி போட்ட டீவீட்டுக்கு சந்தானம் ஆதரவு தெரிவித்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சத்குருவிற்கும் பெரிதாக அறிமுகம் தேவையில்லை ஆன்மீக சொற்பொழிவாளரான இவர் ஈஷா யோகா சிவன் சிலை மூலம் பெரும் பிரபலமடைந்தார். மேலும், பல சதுர கிலோ மீட்டரை அழித்து தான் சத்குரு ஈஷா யோகா சிவன் சிலையை கட்டினார் என்று பலர் சர்ச்சைகள் கூட எழுந்தது. சத்குருவிற்கு சாமானிய மக்களை போல தமிழ் திரையுலகில் பல நடிகர் நடிகைகளும் பக்தர்கள் தான்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சத்குரு, கோவில்களை பற்றி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது.ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல என்று பதிவிட்டு நாட்டின் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை டேக் செய்து இருந்தார்.

- Advertisement -

அதே போல மற்றோரு டீவீட்டில், வழிபாட்டுத்_தலங்கள் நியாயத்துடன் நடத்தப்படவேண்டும் எனக் கேட்பது எப்படி அரசியல் நகர்வாக முடியும்? என் தாழ்மையான வேண்டுகோள்.சத்குருவின் இந்த ட்வீட் குறித்து நடிகர் சந்தானம் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், சத்குருவின் கருத்தை முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். பக்தர்களிடம் கோவில்களை விட்டுவிடுங்கள் என்று ட்வீட் போட்டிருந்தார். இதையடுத்து சந்தானத்தை பலரும் திட்டி தீர்த்து ட்வீட் போட்டனர்.

இப்படி ஒரு நிலையில் சத்குருவுடன் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சந்தானம், நான் படப்பிடிப்புக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது,  நிறைய கோவில்களில் பராமரிப்பு இல்லாமல் இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். இங்கு வரும் வருமானத்தை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை, உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று என்னிடம் கோவில் நிர்வாகிகள் கேட்டனர்.  எனவே, சத்குருவின் அந்த ட்வீட் எனக்கு சரி என்று பட்டது. ஆதரித்து நான் ட்வீட் போட்டேன். உடனே என்னையும் சங்கி என்று பலர் கமென்ட் செய்து திட்ட ஆரம்பித்தனர். ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

-விளம்பரம்-
Advertisement