கடந்த 2019ல் தெலுங்கு சினிமாவில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமான “ஏஜென்ட் சீனிவாச ஆத்ரேய” என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உருவாகியுள்ள “ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்படத்தில் தான் சந்தானம் தற்போது நடித்துள்ளார். இப்படத்தினை இயக்குனர் மனோஜ் பிதா என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இவர் ஏற்கனனே “வஞ்சகர் உலகம்” என்ற திரைபடத்தை இயக்கியிருந்த நிலையில் ஏஜென்ட் கண்ணாயிரம் இவரின் இரண்டாவது படமாகும்.
ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாகவும், ரியா சுமன் கதாநாயகியாகவும், ரெடின் கிங்ஸ்லி, முனிஷ் கான், விஜய் டிவி புகழ், குரு சோமசுந்தரம் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் யுவன் சங்கீர் ராஜாவின் இசை படத்திற்கு வலுவூட்டியது என்று சொல்லலாம். சமீபத்தில் வெளியாகியிருந்த இப்படத்தின் ஒப்பாரி பாடலானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தான் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் படக்குழு செய்தியாளர்களை சென்னையில் சந்தித்திருந்தது.
இந்த நேர்கானலில் சந்தானம், இயக்குனர் மஜோஜ் பிதா, விஜய் டிவி புகழ், ரியா சுமன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் மனோஜ் பிதா கூறும் போது.. முந்திய படங்களில் பார்த்த நடிகர் சந்தானத்தை இப்படத்தில் பார்க்க மாட்டீர்கள் அதற்க்கு மாறாக முற்றிலும் புதிய அதிகம் பேசாதா, உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் சந்தானம் ஏஜென்ட் கதாபாத்திரத்தில் மகன் – தாய்கிடையான பாச்சப்போராட்டத்தினை இப்படத்தில் சொல்ல முயற்சி செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் மனோஜ் பிதா.
அதன் பிறகு பேசிய நடிகர் சந்தானம் இந்த திரைப்படத்தில் நான் சில காட்சிகளில் பஞ் டைலாக்குகளை சேர்க்கலாமா என்று கேட்டபோது அதற்க்கு இயக்குனர் மனோஜ் பிதா மறுத்து விட்டார். அதே நேரத்தில் தெலுங்கு திரைப்படத்தை போல இருக்காமல் இந்த கதைக்கு என்ன தேவையோ அதனை செய்திருக்கிறோம் என்று கூறினார். மேலும் தானும் இப்படத்திற்கு பிறகு சீரியஸான படங்களை தவிர்த்து விட்டு வரும் காலங்களில் தன்னுடைய பாணியில் நாங்கு படங்களில் நடிப்பதாக தெரிவித்திருந்தார்.
பிறகு செய்தியாளர் ஒருவர் மக்கள் தற்போது மிகவும் கன்டண்ட்டை விரும்புகின்றனர் குறிப்பாக ஓடிடி வந்த பிறகு ரசிகர்கள் பல படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டனர், உலக சினிமா தெரிந்து விட்டது இந்நிலையில் படத்தின் கண்டன்ட் எந்த அளவிற்க்கு முக்கியம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த நடிகர் சந்தானம் அப்போதிலிருந்தே மக்கள் புத்திசாலியாகத்தான் இருக்கிறார்கள்
`அதனால் தான் நல்ல படம் மட்டுமே ஹிட் ஆகியது, அதே போலத்தான் இப்போதும் நல்ல திரைப்படங்கள் ஹிட் அடிக்கிறது. நல்ல கண்டன்ட்டை புதிதாக யோசித்து சரியாக செய்தால் ஹிட் ஆகும், அப்படியுள்ளாமல் கொஞ்சம் மாவரைதான் அவ்ளோவுதான் என்று கூறிய நடிகர் சந்தானம், அப்போது கொஞ்சமாக துப்பினார்கள் இப்பொது சோஷியல் மீடியாக்கள் இருப்பதினால் ரொம்ப துப்புகிறார்கள் என்று கூலாக கூறியிருந்தார். இந்நிலையில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படமானது வரும் 25ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.