விழாவுக்கு வரக்கூடாதுன்னு தான் நெனச்சேன் – குடி போதையில் பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு சந்தானம் பட இயக்குனர் விளக்கம்.

0
1313
jhonson
- Advertisement -

ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா பெர்ரி நடிப்பில் வெளியான படம் ‘ஏ1’. சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். இப்படத்துக்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜானசன் கே இயக்கத்தில் சந்தானம் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன், எடிட்டராக பிரகாஷ் பாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்தப் படத்தின் பிரஸ் மீட் விழா நடைபெற்றது. இதில் படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் படத்தின் கதாநாயகன் சந்தானம் ஆகியோர் பங்கு பெற்று இருந்தார்கள். இந்த படத்தின் இயக்குனருக்கு ஒரு சிறு கார் விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் ஆரம்பத்தில் கூறப்பட்டது .இருப்பினும் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு சில நிமிடத்திற்கு முன்பாக மேடைக்கு வந்தார் இயக்குனர் ஜான்சன்.ஆரம்பத்திலிருந்தே என்ன பேசுவது என்ற குழப்பத்தில் இருந்த இயக்குனர் தான் இல்லை என்று அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார் அதேபோல படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் பெயரைக்கூட மற்றவர்களிடம் கேட்டு கேட்டு சொன்னார் இயக்குனர் ஜான்சன் இதனால் அரங்கத்தில் கொஞ்சம் சிரிப்பலை ஏற்பட்டது.

- Advertisement -

மேலும், எனக்கு படத்தில் பணிபுரிந்தவர் பெயர்கள்தான் வாயில் வரவே மாட்டேங்குது என்று கூறிய இயக்குனர் ஜான்சன் மற்றவர்களை தவிர நான் மட்டும்தான் ஒர்த் இல்லை என்றும் கூறினார். ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் படம் வார்த்தை இல்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு நல்லா இல்லை என்றால் பரவாயில்லை போனால் போகட்டும் என்று சொன்னதும் மேடையிலிருந்த படக்குழுவினர் கொஞ்சம் முகம் சுளித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் ஜான்சன் குடி போதையில் வந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள இயக்குனர் ஜான்சன், இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், விழாவிற்கு வரும் முன்னர் தன்னுடைய கார் விபத்துக்குள்ளானது என்றும் மேலும், நான் மேடையில் ஏறியதும் நான் பேச நினைத்ததை எல்லாம் மறந்துவிட்டதால் என்ன பேசுவது என்ற குழப்பத்தில் அப்படி பேசிவிட்டதாகவும் கூறியுள்ளார் ஜான்சன். அவர் மேலும் கூறியதை வீடியோவில் பாருங்க.

-விளம்பரம்-
Advertisement