18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜசிம்ஹா கெட்டப்பில் சந்தானம். வைரலாகும் புகைப்படம்.

0
1105
santhanam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். சந்தானத்தின் நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் எப்போதும் பஞ்சமே இல்லை. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். ஆரம்பத்தில் இவருடைய சில படங்கள் தோல்வியில் முடிவடைந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Santhanam reveals the first look poster of Biskoth | Tamil Movie ...

அந்த வகையில் நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ,ஏ1 போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது.சமீபத்தில் சந்தானம் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த டகால்டி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் சந்தானம் அவர்கள் மூன்று வேடங்களில் ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : ஒட்டு மொத்த தமிழர்களையும் அசிங்கபடுத்தி இருகாங்க – வீடியோ கிளிப்பை பகிர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன்.

- Advertisement -

அதோடு இந்த படத்தில் சந்தானத்தின் மகனும் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் டிக்கிலோனா உருவாகி வருகிறது.இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அனகா, ஷிரின்,யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம், ‘பிஸ்கோத்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியான நிலையில் இந்த படத்தை பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சந்தானம் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா ராஜசிம்ஹா கெட்டப்பில் ஒரு சில காட்சிகளில் தோன்ற இருக்கிறாராம். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement