ஒட்டு மொத்த தமிழர்களையும் அசிங்கபடுத்தி இருகாங்க – வீடியோ கிளிப்பை பகிர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
35384
vanitha
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஏற்கனவே 2 முறை திருமணமான வனிதா தற்போது ஏற்கனவே திருமணமான பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பீட்டர் பவுல் தனது முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதா திருமணம் செய்து கொண்டதால் இந்த திருமணமும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

பீட்டர் பவுல் மீது ஏற்கனவே பீட்டர் பவுலின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த பிரச்சினை ஒரு புறம் சென்று கொண்டிருக்க, வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமண பிரச்சனையில் பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து விஷயத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இவர்களை தொடர்ந்து சூர்யா தேவி., லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி என்று பலரும் இந்த பிரச்சனையில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இதையும் பாருங்க : 5 மணி குயின், 5 மணி ஏஞ்சல். ரசிகர்களை குஷியில் புலம்பிவிட்ட ஷிவானியின் 5 மணி போஸ்ட்.

- Advertisement -

ஆனால், இவர்கள் அனைவரையும் திட்டி தீர்த்து தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் வனிதா. அதிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா லைவ் பேட்டியில் தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்த பின்னர் இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து வனிதாவுக்கு எதிராக பலரும் தங்களது கண்டனங்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க லட்சுமிராமகிருஷ்ணன் கஸ்தூரி ஆகிய இருவரும் தொடர்ந்து ட்விட்டரில் வனிதா குறித்து பதிவிட்டு வருகிறார்கள் இந்த நிலையில் தமிழர்களின் கலாச்சாரம் குறித்து பேசியதாக ஒரு வீடியோ கிளிப்பிங்கை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் இவர் அனைத்து தமிழ் பெண்களையும் அவமதித்து இருக்கிறார். மானமுள்ள அனைத்து நபர்களுக்கும் உள்ளே கொதித்துக்கொண்டு அதில் நானும் ஒருவன் தான்.

-விளம்பரம்-

அவர்களெல்லாம் இவரை தெருவில் இழுத்துப்போட்டு மன்னிப்பு கேட்க வைத்திருக்க வேண்டும். ஆனால், அது சட்ட ரீதியாக பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தான் நான் வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இது ஒருபுறமிருக்க நேற்று ட்விட்டரில் இருந்து வெளியேறிய வனிதா மீண்டும் தனது ட்விட்டரை ஆக்டிவேட் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement