பாரிஸ் ஜெயராஜ் படத்தை பார்க்க வந்த சந்தானத்தின் மகன் கொடுத்த விமர்சனம் – வைரல் வீடியோ.

0
1620
santhanam
- Advertisement -

தன் தந்தை நடித்த படத்தை பார்த்துவிட்டு சந்தானம் மகன் சொன்ன விமர்சனத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம்.தமிழ் சினிமா உலகிற்கு காமெடி நடிகனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தனம்.இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார்.ஆரம்பத்தில் இவருடைய சில படங்கள் தோல்வியில் முடிவடைந்தாலும் விடா முயற்சியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ,ஏ1 போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது. இப்படி ஒரு நிலையில் சந்தானம் நடிப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ் ‘ திரைப்படம் இன்று (பிப்ரவரி 12) வெளியாகி இருக்கிறது. ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா பெர்ரி நடிப்பில் வெளியான படம் ‘ஏ1’. சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். இப்படத்துக்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜானசன் கே இயக்கத்தில் சந்தானம் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : அத மாத்துங்க ப்ளீஸ் – ஆரியின் பிறந்தநாளுக்கு சனம் வைத்த அன்பு கோரிக்கை. ஆனா, இன்னும் அத செய்யாம இருக்காரே.

- Advertisement -

இதில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன், எடிட்டராக பிரகாஷ் பாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். கானா பாடகராக வலம் வரும் சந்தானம் ஆர்.எஸ்.சிவாஜியின் மகளை சின்சியராய் காதலிக்கிறார். இந்தக் காதலைப் பிரிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆர்.எஸ்.சிவாஜி ஒரு வழக்கறிஞரின் உதவியை நாடுகிறார். அவரின் ஐடியாவுக்குப் பலன் கிடைக்கிறது. காதலர்கள் பிரிகிறார்கள்.

தன் தந்தைதான் அந்தக் காதலைப் பிரித்துவிட்டார் என்பதால் சந்தானம் கடுப்பாகிறார். அந்த நேரத்தில் கல்லூரி மாணவி அனைகா சோதியால் இன்னொரு காதல் முளைக்கிறது. இந்தக் காதல் கைகூடியதா, இதில் அப்பா செய்த சொதப்பலும், குழப்பமும், ஆபத்தும் என்ன, அனைகாவின் முன்னாள் காதலன் என்ன ஆனார் என்பது தான் படத்தின் மீதி கதை. இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் படத்தை பார்க்க திரையரங்கம் வந்த சந்தானத்தின் மகனை பார்த்தது பலரும் வியந்து போனார்கள். மேலும், படத்தை பார்த்துவிட்டு சந்தானத்தின் மகன் படம் எப்படி இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement