விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
ஆரி, பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை இவருக்கு ஆதரவாக இருந்தது சனம் மற்றும் அனிதா தான். அவ்வளவு ஏன் ஆரி டைட்டில் வின்னர் ஆன போது கூட சனம் மற்றும் அனிதா தான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். . சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய போது மக்கள் பலரும் சனம் ஷெட்டி வெளியேறியது நியாயமே இல்லை என்று கருத்து தெரிவித்தனர். சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஆரி மற்றும் அனிதாவிடம் தான் நெருக்கமாக இருந்து வந்தார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது கூட ஆரி பற்றி தான் பெருமையாக பேசி இருந்தார்.
இதையும் பாருங்க : இவ்ளோ Controversy இருக்கும்னு எனக்கு தெரியாது – புதிய முல்லையின் பேச்சால் கடுப்பான சித்ராவின் ரசிகர்கள்.
அவ்வளவு ஏன் இறுதி போட்டிக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டிற்கு சனம் ஷெட்டி சென்ற போது ஆரியிடம் உங்களுக்காக தான் வந்தேன் என்று கூறி இருந்தார். மேலும், அனிதா மற்றும் ஆரியிடம் பேசிய சனம், நான் பல முறை உங்களை காயப்படுத்தி இருப்பேன். அதையெல்லாம் மறந்து மன்னித்துவிடுங்கள் என்று கூறி ஆரிக்கு முத்தமிட்டார். அதன் பின்னர் பேசிய ஆரி, மறப்போம் மன்னிப்போம் என்று கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் நடிகர் ஆரி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதற்கு சனம் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு ஆரியும் நன்றி தெரிவித்தார். இப்படி ஒரு நிலையில் ஆரியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார் சனம். ஆரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் Bioவில் இன்னமும் பிக் பாஸ் போட்டியாளர் என்று இருக்கிறது. அதை பிக் பாஸ் வெற்றியாளர்னு மாத்துங்க ப்ளீஸ். மக்கள் மனதை வென்ற உண்மையான வெற்றியாளர் என்று பதிவிடுள்ளார். ஆனால், இன்னும் ஆரி Bioவில் அதை மாற்றவில்லை.