சந்தோஷ் நாராயணன் முதலில் யார் என்று தெரியாதுனு சொல்லியுள்ள அஜித் – பின் நடந்தது என்ன தெரியுமா ?

0
1594
santhosh
- Advertisement -

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் குறித்து பல்வேறு பிரபலங்களும் புகழ்ந்துள்ளதை பற்றி நிறைய கேட்டுள்ளோம். அவருடன் பல ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட போது நடந்த ஒரு ஸ்வரைசமான சம்பவம் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் சமீப காலமாக பறை இசை என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது சந்தோஷ் நாராயணன் தான். பா ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தான் சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் சூதுகவ்வும் ஜிகர்தண்டா மெட்ராஸ் கபாலி காலா போன்ற பல்வேறு படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் சந்தோஷ் நாராயணன் இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக அதில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெற்று விடும் அந்த பாட்டு மாபெரும் ஹிட் அடித்து விடுகிறது. அதே போல் இவர் இசையமைத்த அனைத்து படங்களின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் சமீபத்தில் இவர் தனுசுக்கு இசையமைத்த இரண்டு படங்களின் இசையும் வேற லெவல். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

இந்த இரண்டு படங்களின் பாடல்களும் வேற லெவலில் ஹிட் அடித்தது. அதிலும் ஜமகமே தந்திரம் படத்தின் ரக்கிட்ட ரக்கிட்ட பாடலும் கர்ணன் படத்தின் கண்டா வர சொல்லுங்க பாடலும் மாபெரும் வெற்றியடைந்து. சந்தோஷ் நாராயணன் இதுவரை விஜய், அஜித் படங்களுக்கு இசையமைத்தது கிடையாது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசிய சந்தோஷ் நாராயணன், ஒருமுறை நான் அவரை ஏர்போர்டில் சந்தித்தேன். அப்போது என்னை யாரென்று தெரியாமல் என் கையை பிடித்துக்கொண்டு 5 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார்.

பின்பு என்னிடம் என்ன செய்ரீங்க என்று கேட்டதும், நான் மியூசிக் டேரக்டரா இருக்கேன் என்று சொன்னேன். அதற்கு அவர், அப்படியா நல்லா பண்ணுங்க பெரிய ஆளா வரணும் என்று சொன்னார்.பின்னர் என் மனைவி தான் என்னை பற்றி அஜித்திடம் சொன்னார். அதன் பிறகு என்னை அவர் தனியாக அழைத்து சென்று ரொம்பா சாரிங்க உங்களை தெரியவில்லை என்று சொன்னார். அதே போல அவரிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் கூட மிகவும் கனிவாக வெளியே வந்து புகைப்படம் எடுத்துக்கலாம் என்று சொன்னார். அவர் இவ்வளவு தன்மையாக பேச வேண்டும் என்று அவசியமே இல்லை. ஆனால், அனைவரிடமும் அவர் மிகவும் கனிவாக தான் பேசினார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement