மெர்சல் பாணியில் விமான நிலையத்தில் அவமானப்பட்ட சந்தோஷ் நாராயணன்! இதுதான் நடந்தது

0
1294
Santhosh Narayanan

வெளிநாடுகளுக்கு சென்றால் விமான நிலையத்தில் போதுவாக சோதனை நடப்பது வழக்கம் தான். ஆனால், விமான நிலைய அதிகாரிகள் வழக்கத்திற்கு மாறான சோதனைகளில் ஈடுபட்டு ஒருவரை அவாமனப்படுத்தும் செயலும் காலம் காலமாக நடந்து வருகிறது.
santhosh narayananஆனாளப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், அமெரிக்கா சென்ற போது அவரை விமான நிலைய அதிகாரிகள் வழக்கத்திற்கு மாறான சோதனைகளில் ஈடுபட்டு அவமானப்படுத்தும் வகையில் அவரை ஒரு தீவிரவாதி போல் தனியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதே போல் மெர்சல் படத்தில் விஜய், தமிழர்களின் உடையான வேஸ்டி மற்றும் சட்டை அணிந்து செல்வார், அவர் இறங்கிய விமான நிலையத்தில் அவரைப் பார்த்து வித்யாசமாக இருப்பதானால் சோதனை செய்து அவமனப்படுத்துவார்கள்.
santhosh narayananதற்போது அதே போல் இசைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சற்று ஆஸ்திரேலியா நாட்டினரைப் போல் இல்லாதால் அவரை தனியாக அழைத்து மிகவும் மோசமாக நடத்தி அவரை போதைப் பொருட்கள் வைத்துளாரா என சோதனை செய்துள்ளனர். மேலும், தொடர்ச்சியாக அவரை 8 முறை தனியாக அழைத்து இது போன்று சோதனை நடத்தியுள்ளனர்.
santhosh narayananஇதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவர். மேலும், இது போன்ற நிறவெறி எப்போது தீரும் எனவும் சோகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.