‘வம்புல தும்புல’ பாடலின் தலைவன் வடிவேலு வெர்ஷன் வீடியோ – சந்தோஷ் நாராயணன் போட்ட கமன்ட்.

0
10758
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தில் அதிக பாடல்கள் இல்லை என்றாலும் இந்த படத்தில் வந்த ‘வம்புல தும்புல’ பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த பாடலுக்கு சாண்டி தான் டான்ஸ் மாஸ்டர். இப்படி ஒரு நிலையில் இந்த பாடலின் வடிவேலு வெர்ஷன் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : ஆர்யா குடிக்க மாட்டான், ஆனா பொண்ணுங்க விசயத்துல – வைரலாகும் ஜீவாவின் வீடியோ.

- Advertisement -

பொதுவாக எந்த படம் வெளியானாலும் அதை வைத்து வடிவேலு வெர்ஷன் வந்துவிடும். என்னதான் வடிவேலு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்றும் சமூக வலைதளத்தில் மீம் கிரியேட்டர்களின் Template ஆக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ‘வம்புல தும்புல’ பாடலை போட்டு வடிவேலு திமிரு படத்தில் ஆடிய ஆட்டத்தை இணைத்து வீடியோ ஒன்று வைரலானது.

இந்த விடியோவை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், ப ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணனையும் டேக் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள விதமாக சந்தோஷ் நாராயணன், வின்னர் படத்தில் வரும் வடிவேலுவின் GIF புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘god level’ என்று கமன்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement