இஸ்லாமியராக இருந்துகொண்டு எப்படி சிவனை வழிபடுவீர்கள் – சாரா அலிகானிற்கு நெட்டிசன்கள் கேள்வி.

0
449
saraali
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் சாரா அலி கான். பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தில் பிறந்த இவர் நடிகர்கள் அமிர்தா சிங் மற்றும் சைப் அலிக்கான் ஆகியோரின் மகள் ஆவார். பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சயீப் அலிகானின் மகள். அதாவது சயீப் அலிகானின் முதல் மனைவியின் மகள் தான் சாரா அலி கான். கடந்த சில வருடங்களுக்கு முன் அலி தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்துவிட்டார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூரை பல வருடங்களாக காதலித்து வந்தார் . அதன் பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். விகாரத்துக்கு பின்னரும் தனது முதல் மனைவிக்கு பிறந்த மகளான சாராவை கவனித்து கொள்கிறார் சைப் அலிகான். மேலும், சாரா அலி கான் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற பிறகு 2018 ஆம் ஆண்டில் கேதார்நாத் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘அத்ரங்கி ரே ‘ என்ற படத்தில் சாரா அலி கான் நடித்து இருந்தார்.

- Advertisement -

கடவுள் பக்தி :

இந்த நிலையில் இஸ்லாமிய தந்தை சைப் அலிக்கான் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த தாய் அமிர்தா சிங் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் சாரா அலிகான் தன்னுடைய தாயை போலவே இந்து மத வழிபாடுகளில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகிறார். மேலும் தொடர்ந்து பக்கத்தி சுற்றுலாக்களை மேற்கொண்டு அங்கே எடுக்கப்படும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

சோசியல் மீடியா பிரபலம் :

சாரா அலி கான் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார் என்றே சொல்லலாம். தற்போது இவர் பல படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ ஷூட் புகைப்படம்,வீடியோக்களை பகிர்ந்து வருவார். அதோடு தன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

-விளம்பரம்-

இன்ஸ்டா பதிவு :

இந்த நிலையில் தான் சாரா அலிகான் கடந்த மகா சிவராத்திரிக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அந்த பதிவில் கேதர்நாத் கோவிலில் பக்திமயமாக சிவனை சாரா அலிகான் வழிபடும் புகைப்படங்கள் இருந்தன. இது தான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது சாரா அலிகான் இஸ்லாமிய பின்னணி கொண்டவர் என்பதினால் எப்படி சாரா அலிகான் இப்படி பதிவிடலாம் என்று நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து :

இவை ஒருபுறம் இருக்க சாரா அலிகான்வின் தாய் இந்து என்பதினால் இப்படி அவர் செய்வதில் தவறில்லை என்றும், எந்த கடவுளை சாரா வழிபட வேண்டும் என்பபத்தை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சாராவின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவும் கூறி வருகின்றனர். இந்த நிகழ்வை போலவே சாரா அலிகான் தன்னுடைய தோழியும் நடிகையுமான ஜான்வி கபூருடன் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்த போது தற்போது எதிர்ப்பு கிளம்பியது போலவே அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement