இனிமேல் நான் வடிவேல் உடன் படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் சுப்புராஜ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் சுப்புராஜ். இவர் வடிவேலுவின் காமெடி குழுவில் ஒருவராக திகழ்கிறார். அர்ஜுன் நடிப்பில் வெளிவந்திருந்த மருதமலை படத்தில் சாரைப்பாம்பு என்று இவர் தன்னுடைய பெயரை சொல்லி இருப்பார். இந்த காட்சி எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
அதிலிருந்து தான் இவரை சாரைப்பாம்பு சுப்புராஜ் என்று பலரும் அழைத்தார்கள். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் வடிவேல் காம்பினேஷனில் தான் படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சுப்புராஜ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய சினிமா அனுபவங்களை குறித்து கூறியிருந்தது, ராசாவின் மனசிலே என்ற படத்தில் நான் இணை இயக்குனராக பணிபுரிந்தேன். அந்த படத்தின் மூலம் தான் வடிவேலு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
சுப்புராஜ் அளித்த பேட்டி:
அந்த படத்தில் இருந்து எனக்கும் வடிவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு என்னுடைய நண்பன் தனியாக படம் இயக்குவதால் அவன் என்னை அவனுடன் வைத்துக்கொண்டான். ஆனால், அந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கும் போது அவன் இறந்து விட்டார். இதனால் நான் மீண்டும் தோல்வி அடைந்தேன். அதன் பிறகு ஒரு படத்திற்கு காமெடி ட்ராக் எழுத கூப்பிட்ட போது நான் மீண்டும் வடிவேலுவை சந்தித்தேன். அந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன்.
வடிவேலு குறித்து சொன்னது:
அதன் பிறகு நீ என்னுடன் இருந்து விடு என்று வடிவேலு சொன்னார். நானும் அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் என்னை சாரைப்பாம்பு என்று எல்லோரும் அழைப்பதற்கு அவர் தான் காரணம். இருந்தாலும், வடிவேலு கூப்பிட்டாலும் நான் அவருடைய படங்களில் நடிக்க மாட்டேன்.காரணம், எனக்கு சாப்பாடு போட்டு வளர்த்தவர் கேப்டன் விஜயகாந்த் தான். அவர் செய்த தர்மங்கள் எண்ணில் அடங்காதவை.
விஜயகாந்த் குறித்து சொன்னது:
எத்தனையோ இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பல பேரை அவர் வளர்த்து விட்டிருக்கிறார்கள். அவரைப் பற்றி தவறாக பேசக்கூடிய தகுதி யாருக்குமே இல்லை. அனைத்து நடிகர் நடிகைகளும், கேப்டன் மாதிரி யாரும் இல்லை என்று தான் சொல்வார்கள். இறைவனை தாண்டி விஜயகாந்த் மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். அவரைப் பற்றி தவறாக பேசியதால் தான் வடிவேல் உடன் எனக்கு நடிக்க விருப்பமில்லை என்று கூறி இருக்கிறார்.
விஜயகாந்த்-வடிவேலு பிரச்சனை:
பத்தாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்தார் வடிவேலு. இவர் திமுகவுக்காக பிரசாரம் செய்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதனால் வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தயங்கி இருந்தார்கள். மேலும், வடிவேலு திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக நினைத்து விஜயகாந்தை மிகவும் கேவலமாக பேசினார். இதனால் தான் இருவருக்கும் மத்தியில் ப்ரச்சனை ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.