கனா காணும் கிரணை நியாபகம் இருக்க – அவருக்கு திருமணம் முடிந்தது. இதோ புகைப்படம்.

0
1599
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 90களில் பிறந்தவர்களுக்கு இந்த தொடர் மிகவும் பிடித்தமான தொடராக இருந்து வந்தது . 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பான இந்த தொடர் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. கானா காணும் காலங்கள் தொடரைப் போலவே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற இரு தொடர்களும் மாபெரும் வெற்றி தொடராக அமைந்திருந்தது.

- Advertisement -

கிரண் :

இப்படி 90ஸ் கிட்ஸ் விருப்பமான தொடராக இருந்த கானா காணும் காலங்கள் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகர் கிரண். இவர் தொடக்கத்தில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். மானாட மயிலாட பிரபலங்கள் பலரும் தற்போது சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கிரனும் பிரபலமான நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற சீரியலில் நடிகர் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் கதாபாத்திரத்தில் நடித்தார். பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலை தவிர, அவர் கானா காணும் காலங்களிலும் என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் காணப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் மதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் லிப்ட், எஸ்டேட் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கிரண் நிச்சயதார்த்தம் :

இந்த நிலையில் தான் தற்போது கிரணுக்கு திருமணம் நித்சயக்கப்பட்டதாக சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தன்னுடைய வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகர் கிரண். இவர் மஞ்சுஷா காரம்லா என்ற பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலான் நிலையில் நடிகர் கிரணுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வன்னமாக இருக்கிறது.

Advertisement