மன்னிச்சிடுன்னு சார், நான் வித்யாசமானவன் – VTK 50வது நாள் விழாவில் சிம்பு ரசிகர்களால் கடுப்பான சரத்குமார்.

0
529
- Advertisement -

வெந்து தணிந்தது காடு படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்களால் கடுப்பாகி இருக்கிறது சரத்குமார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. சில ஆண்டுகளுக்கு முன்னர் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்த சிம்பு இடையில் நடித்த பல்வேறு திரைப்படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது. அதேபோல இவர் உடல் எடை கூடியதால் இவர் நடிக்கும் பழங்கள் எல்லாம் பெரும் கேள்விக்கு உள்ளானது. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், அந்தத் திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.இ ந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து சிம்புவிற்கு ஒரு ரீ என்ட்ரியாக அமைந்திருந்தது இந்த படத்தின் வெற்றிக் களிப்பில் இருந்த சிம்புவிற்கு அடுத்த ஒரு உற்சாகமாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமைந்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிஇருந்தார்.

- Advertisement -

பெரும் வரவேற்பை பெற்ற படம் :

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான்இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்துஇருந்தனர். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் சிம்பு அவர்கள் முத்து எனும் கதாபாத்திரத்தில்நடித்து இருந்தார்.

படத்தின் இரண்டாம் பாகம் :

எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத தன்னுடைய நடிப்பை சிம்பு வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் வெகுளித்தனமாகவும், இரண்டாம் பாதியில் மாசான நடிப்பையும் சிம்பு கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளில் வழக்கம் போல் சிம்பு பார்வையாளர்களை ரசிக்க வைத்திருந்தார் என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்தின் Climaxல் இரண்டாம் பாகம் வருவது போல லீட் காண்பிக்கபட்டு இருந்தது.

-விளம்பரம்-

50வது நாள் கொண்டாட்டம் :

இப்படி ஒரு நிலையால் இந்த படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , சரத்குமார் உள்ளிட்ட துறை பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் சரத்குமார் பேசிக்கொண்டு இருக்கும் போதே சிம்புவின் ரசிகர்கள் சிலர் தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டு இருந்தனர் ‘அப்போது அமைதியாக இருந்தால் தான் எல்லாரும் பேசுவதை கேட்க முடியும் என்று சாந்தமாக சொன்னார்’.

சிம்பு ரசிகர்களால் கடுப்பான சரத்குமார் :

இதன் பின்னர் தொடர்ந்து சரத்குமார் பேசிக்கொண்டே இருக்கும் போது மீண்டும் ரசிகர்கள் கூச்சலிட ஒருகட்டத்தில் கடுப்பாகி ‘தம்பி நீங்க அமைதியா இருந்தா பேசலாம், நீங்க அப்படி இருந்தால் தான் எல்லாரும் ரசிப்பார்கள் என்று கூறிவிட்டு மன்னிக்கணும் கணேஷ் அவர்களை நான் கொஞ்சம் வித்தியாசமானவன். சத்தம் போட்டால் எதற்காக விழாவிற்கு வந்தோம் என்பதே தெரியாமல் போய்விடும். பத்திரிக்கையாளர்களுக்கும் என்ன பேசுகிறோம் என்பது கேட்காது நல்ல கருத்துக்களை சொன்னால் அதுவும் கேட்காமல் போய்விடும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement