ரஜினி, விஜய் மட்டுமல்ல அஜித்தும் சூப்பர்ஸ்டார் தான் – ரசிகர்களுக்கு சரத்குமார் வைத்த ட்விட்

0
413
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் வரும் பொங்களை முன்னிட்டு 11ஆம் தேதி வெளியாக உள்ளதால் இரு ரசிகர்களுக்கும் இடையே பெரிய பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. அதிலும் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய்யை பற்றிய கூறிய சர்ச்சைக்கு பிறகு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது சரத்குமார் விஜய் சூப்பர் ஸ்டார் என்ற கூறியதுதான். இந்நிலையில் தான் எதற்கு விஜய்யை சூப்பர்ஸ்டார் என்று சொன்னேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

வாரிசு :

தமிழ் சினிமா உலகில் பல காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இருக்கிறது. வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு படம் வெளியாக படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் மந்தனா, நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர்

- Advertisement -

விஜய் தான் சூப்பர்ஸ்டார் :

இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது. இந்த இசை வெளியிட்டு விழாவில் வாரிசு படக்குழுவினர் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய சரத்குமார் `விஜய் தான் சூப்பர் ஸ்டார் இதனை நான் என்னுடைய சூரியவம்சம் படத்தின் இசைவெளியிட்டு விழாவில் கூட சொல்லியிருக்கிறேன் என்று கூறினார்.

ஏற்கனவே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய் தான், ரஜினிகாந்த் அப்போதய சூப்பர் ஸ்டார் என்று கூறியது பெரு சர்ச்சைக்குள்ளாகி விஜய், அஜித், ரஜினி என மூன்றும் நடிகர்களின் ரசிகர்களுக்கும் இணையத்தளத்தில் மோதிக்கொண்டனர். இந்த நிலையில் வாரிசு இசை வெளியிட்டு விழாவில் சரத்குமார் விஜய் தான் சூப்பர் ஸ்டார் எனக் கூறியது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

-விளம்பரம்-

எல்லோரும் சூப்பர் ஸ்டார்தான் :

இந்த நிலையில் தற்போது சரத்குமார் கொடுத்திருந்த பேட்டியில் தான் ஏன் விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொன்னேன் என்று கூறியுள்ளார். அவர் `கூறுகையில் இந்த விஷியத்தை பற்றி நான் யாரிடமும் விளக்கம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் நான் ரஜினியை சூப்பர் ஸ்டார் இல்லை என்று சொல்லவில்லை, அஜித்தை சூப்பர்ஸ்டார் இல்லை என்று சொல்லவில்லை, விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று தான் சொல்லியிருந்தேன்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

ரசிகர்களை யார் அதிகமாக கவருகின்றனரோ அவர்கள் சூப்பர் ஸ்டார்தான், அமிதாப் பச்சனும் சூப்பர்ஸ்டார்தான், ஷாருக்கானும் சூப்பர்ஸ்டார் தான். நான் யாரையும் குறிப்பிட்டு இவர் தான் சூப்பர்ஸ்டார், அவர்தான் சூப்பர்ஸ்டார் என்று சொல்லவில்லை. என்னுடைய அப்பா எனக்கு சூப்பர்ஸ்டார், உங்களுக்கும் உங்ககளுடைய அப்பா சூப்பர்ஸ்டார். அது போல வாழ்க்கையில் சாதிக்கும் ஒவ்வொரு மனிதனும் சூப்பர்ஸ்டார் தான் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இணையவாசிகள் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

Advertisement