பேனா சிலை ஓகே , ஆனா இத்தனை அடிய மட்டும் குறைங்க – சரத்குமார் சொன்ன காரணம்.

0
417
sarath
- Advertisement -

தமிழ் நாட்டின் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி சிறந்து விளங்கிய ஒருவர் கலைஞர் கருணாநிதி, இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக காலமான நிலையில் அவரின் நினைவாக 134 அடி உயர பேணா சிலை ஒன்றை அரசு அமைக்க திட்டம் தீட்டியுள்ளது. ஆனால் இந்த சிலையை நிறுவ தமிழ் நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் முதற்கொண்டு பலரும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் தான் தற்போது நடிகர் சரத்குமார் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

சரத்குமார் :

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னனி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சரத்குமார் தன்னுடைய 22வது திருமணம் விழாவை கொண்டாடி புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சரத்குமார் ஒரு நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடிபில்டர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் சமீபத்தில் விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்திருந்த நிலையில் தான் தற்போது பேனா நினைவுச் சின்னம் குறித்து பேசியுள்ளார்.

- Advertisement -

கருணாநிதி பேனா நினைவிடம் :

சரத்குமார் கூறியதாவது “தமிழ் நாட்டில் வளர்ச்சிக்கு கருணாநிதி ஆற்றிய பங்கு மிகப் பெரியது. இவர் தமிழ்நாட்டில் ஐந்து முறை ஆட்சியில் அமர்ந்துள்ளார். மேலும் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற அரசின் முடிவை நான் வரவேற்கிறேன்.ஆனால் நினைவுச் சின்னம் எழுப்பும் இடம் தான் தற்போது சர்ச்சையாக இருக்கிறது என்பதை என்று கூறினார் கண்டிப்பாக பேனா நினைவு சின்னத்தை கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க முடியாது.

நினைவிடம் வேறு நினைவுச் சின்னம் வேறு :

நினைவிடம் என்பது வேறு நினைவுச் சின்னம் என்பது வேறு தாஜ்மஹால் உள்ளது போல நினைவுச் சின்னங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் அவர்களது பெருமையை கூறும் என்று கூறினார் சரத்குமார். மெரினா கடற்கரையில் ஆமைகள் மற்றும் பவளப்பாறைகள் இல்லை என்பது ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்க கடற்கரையில் இருந்து 1180 அடி தொலைவில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தவறாக தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

-விளம்பரம்-

இரண்டு அடி குறைக்க வேண்டும் :

எனவே அந்த இடத்தில் விட ஒரு சிறந்த இடத்தை தமிழ்நாட்டு அரசால் தேர்வு செய்ய முடிந்தால் அங்கு நினைவு சின்னத்தை அமைக்கலாம். ஆனால் திருவள்ளுவரின் பெருமையை கூறும் வகையில் கருணாநிதி திருவள்ளுவருக்காக அமைத்த 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தார். எனவே தற்போது அந்த சிலையை பேனாவின் சிலையோடு ஒப்பிட்டு ஒரு அடி குறைத்தால் அது முறையாக இருப்பதுடன் அந்த சிலையை அமைத்த கருணாநிதி அவர்களுக்கும் பெருமை சேர்க்கும் என்பதை எனது கருத்தாக இருக்கிறது எனக் கூறினார்.

தமிழர்களாக இருந்தால் இதை செய்யுங்கள் :

மேலும் பேசிய நடிகர் சரத்குமார் “தமிழ் ஆர்வலர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் உணர்வு கொண்டவர்கள், தமிழ் அறிவாளிகள் தமிழை போற்றுபவர்கள் என சொல்லும் அனைவரும் இந்த பேனா நினைவுச் சின்னம் வைப்பதில் தங்களை ஈடுபபடுத்திகொள்ள வேண்டும். தமிழினத்திற்கு கௌரவிக்கும் பணியை நமக்காக எடுத்து தமிழர் உணர்வுகளை ஒன்றிணைத்து இந்த உலக தமிழின தலைவருக்கு நிச்சயமாக ஒரு நினைவுச் சின்னம் வைப்போம் என தெரிவித்துள்ளார். சரத்குமார் இப்படி பேசியது வைரலாகி மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement