குடும்ப தகராறுல தற்கொலை பண்ணவன எல்லாம் ரம்மி விளையாடி செத்ததா சொல்றாங்க – சரத்குமார் ஆவேசம்.

0
482
sarathkumar
- Advertisement -

ஆன்லைன் ரம்மி விளமபரத்தில் நடித்தது குறித்து சரத்குமார் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்திருக்கின்றனர். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.ஆனால், இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் தான் நடித்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இது குறித்து சோசியல் மீடியாவிலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகத்தில் அதிக அளவில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த வகை விளையாட்டுகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

- Advertisement -

இச்சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் அக்டோபர் மூன்றாம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீண்ட காலமாக அந்த மசோதா கிடப்பில் இருந்த நிலையில், ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. இருப்பினும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளையும் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த விளம்பரத்தில் நடித்த சரத்குமார் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நிறைய பேர் தற்கொலை செய்துகொண்டனர் ‘ என்று சுட்டிகாட்டி இருந்தார். இந்த கேள்வியால் ஆவேசமாக சரத்குமார் ‘‘ரம்மி என்பது அறிவு பூர்வமான விளையாட்டு என்றும் அதை விளையாட திறமை அவசியம்.

குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் ஆன்லைன் ரம்மி காக தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் ஆபாச படங்கள், கிரிக்கெட் சூதாட்டம் போன்ற அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் ரம்மி விளையாட்டுக்கு தடை சட்டம் வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்து விட்டேன் எ’

Advertisement