150 வயது வரை யாராவது வாழமுடியுமா? – கேலிக்கு உள்ளான தனது பேச்சு குறித்து சரத்குமார் விளக்கம்

0
4598
- Advertisement -

தன்னை முதலமைச்சர் ஆக்கினால் 150 வயது வரை வாழும் ரகசியத்தை சொல்வேன் என்று தான் பேசியது கேலிக்கு உள்ளான நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் சரத்குமார். தென்னிந்திய சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது இவர் அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். சரத்குமார் அவர்கள் நடிகர், அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த வாரிசு படத்தில் சரத்குமார் நடித்திருந்தார்.

- Advertisement -

சரத்குமார் திரைப்பயணம்:

இந்த படத்தை வம்சி இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் நல்ல வசூலை எட்டிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியிருந்த ருத்ரன் படத்தில் மிரட்டலான வில்லனாக சரத்குமார் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதனை எடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் 2 படத்தில் பெரிய பழுவேட்டையராக சரத்குமார் நடித்திருந்தார்.

சரத்குமார் நடித்த படங்கள்:

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் வசூலை செய்திருக்கிறது. இதனை அடுத்து சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியாகியிருந்த கஷ்டடி படத்தில் சரத்குமார் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் அவர்கள் பரம்பொருள், நிறங்கள் மூன்று போன்ற பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மதுரையில் நடந்த கட்சி விழா;

இந்த நிலையில் கட்சி விழாவில் நடிகர் சரத்குமார் அளித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மதுரையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சரத்குமார் கலந்துகொண்டு கூறியிருப்பது, நம் இயக்கம் எதை நோக்கி செல்ல வேண்டும்? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதையும் உங்கள் தலைவர், உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்பது தீர்மானிக்க வேண்டும். அது சாத்தியமா என்பது 2026 ஆம் ஆண்டு தேர்தலின் போது தான் தெரிய வரும்.

தேர்தல் குறித்து சொன்னது:

அதற்கெல்லாம் முயற்சி, நேர்மை, உடல் வலிமை, மனவலிமை இருக்க வேண்டும். புகையிலை, சிகரெட், பான் மசாலா, கஞ்சா, போதை மாத்திரை, ஊசி போன்ற பல வகையான போதைப் பொருட்கள் இந்தியா முழுவதும் உருவெடுத்து இருக்கிறது. இதை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை இல்லை என்று நான் சொல்லவில்லை. எனக்கு 69 வயது ஆகிறது. இன்றும் நான் 25 வயது ஆகத்தான் இருக்கிறேன். இன்னும் நான் 150 வயது வரை இருப்பேன். வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன். அந்த ரகசியத்தை 2026 ஆம் ஆண்டு அரியணையில் என்னை ஏற்றும் போது சொல்கிறேன் என்று கூறியிருந்தார்.

சரத்குமார் விளக்கம் :

இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சரத்குமார் ‘ஒரு மீட்டிங்கில் பேசும்போது, சுற்றியிருப்பவர்களின் இறுக்க நிலையை தளர்வுபடுத்த வேண்டும் என்பதற்காக காமெடியாக பேசினேன். நான் சொன்னது இவ்வளவு பெரிய செய்தியாகும்போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement