அதை நினைத்து இப்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. வரலஷ்மியிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்.

0
116361
Sarathkumar
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது இவர் அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். சரத்குமார் அவர்கள் நடிகர், அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் பல படங்களிலும் நடித்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னால் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா. இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா. இதில் வரலக்ஷ்மி “போடா போடி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-
Image result for Sarathkumar and Varalakshmi

அதன் பின்னர் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வரலக்ஷ்மி அவர்கள் சர்கார், சண்டக்கோழி, நீயா 2 போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். சரத்குமாரின் இரண்டாம் மனைவி தான் நடிகை ராதிகா. இது அனைவருக்கும் தெரிந்தது தான். சமீப காலமாக சரத்குமார் அவர்கள் அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் திரையுலகில் அப்பப்ப தான் படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் துப்பறியும் கதையில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. இந்நிலையில் இவர் தன்னுடைய மகள் வரலட்சுமி இடம் மனதார மன்னிப்பு கேட்டு உள்ளார் என்ற தகவல் வெளி வந்து உள்ளது.

- Advertisement -

மேலும், சரத்குமார் அவர்கள் தன்னுடைய மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமியுடன் இணைந்து “பிறந்தால் பராசக்தி” என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. மேலும், இது இவர்கள் மூவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும். இந்த படம் குறித்து சரத்குமார் அவர்கள் பேசும் போது தன் மகள் வரலட்சுமி பற்றி தான் அதிகம் பேசினார். வரலட்சுமி நினைத்து மிகவும் பெருமையாகவும் உள்ளது என்று பல விஷயங்களை பேசி உள்ளார். அதில் நடிகர் சரத்குமார் பேசியது, வரலட்சுமி சிம்புவுடன் “போடா போடி” என்ற படத்தில் நடித்து இருந்தார். இதுவே அவர் நடித்த முதல் திரைப் படம் ஆகும். இந்த படம் வெளியே வர பல பிரச்சனைகள் இருந்தது. இதனால் படம் வெளியாக நிறைய நாட்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.

Related image

-விளம்பரம்-

அப்போது நான் ஒரு தந்தையாக வரலட்சுமிக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. அது மட்டும் இல்லாமல் அவருடைய திறமையை மதித்து மற்ற படங்களில் நடிக்க வைக்க நான் வழி வகை செய்து இருக்க வேண்டும். ஆனால், நான் அதை செய்யவில்லை. அதை நினைத்து இப்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த செயலுக்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். இந்த தருணத்தில் வரலட்சுமிடம் நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன். அதோடு வரலட்சுமி தன்னுடைய திறமையை நிரூபித்து அசைக்க முடியாத முன்னணி நடிகையாக வர பல முயற்சிகளை செய்து வருகிறார். இதனால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று கூறி உள்ளார் சரத்குமார்.

Advertisement