பணமில்லாத நேரத்தில் சரத்குமாருக்கு உதவியுள்ள சூப்பர் ஸ்டார். கண்ணீருடன் கூறிய சரத்குமார்.

0
20255
Sarathkumar
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது இவர் அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். சரத்குமார் அவர்கள் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னால் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் சரத்குமார் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் லாக் டவுனில் உள்ளதால் சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை என அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். கொரோனாவின் பரவுதல் தடுப்பதற்காக நாடு முழுவதும் லாக் டவுன் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே பேட்டியும், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நடிகர் சரத்குமார் அவர்கள் பேட்டியில் அளித்த பேட்டியில் தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி குறித்து சில அற்புதமான விஷயங்களை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, உண்மையில் நான் சிரஞ்சீவி காருவுடன் ஒரு திரைப்படம் பண்ண விரும்பினேன். ஆனால், எனக்கு அந்த சமயத்தில் பணம் ரீதியாக சில பிரச்சனைகள்இருந்தது . பின் ஒரு நாள் படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் சந்தித்தோம்.

Did you know why Radhika Sarathkumar slapped Chiranjeevi right at ...

பிறகு நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசி, ஒன்றாக உணவு சாப்பிட்டோம். அப்படி சந்திக்கும் போது நான் அவரிடம் என்னிடம் இருந்த பிரச்சனைகள் எல்லாம் கூறினேன். பின் அவரிடம் நான் படத்தை பற்றி பேசினேன். அவர் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினார். உடனே நான் அவருடைய சம்பளத்தை பற்றி கேட்டேன். அதற்கு அவர் அதையெல்லாம் பின்னால் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று கூறி எனக்கு படத்திற்கான தேதிகள் கொடுத்தார். சினிமா உலகில் இவ்வளவு மிகப்பெரிய இடத்தில் இருந்தாலும் மற்றவர்களை புரிந்து கொள்ளக் கூடியவர் சிரஞ்சீவி.

-விளம்பரம்-

இவர் உண்மையிலேயே ஒரு அற்புதமான மனிதர் என்று உணர்ச்சி வசப்பட சரத்குமார் கூறினார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் சரத்குமார், ராதிகா, விக்ரம், சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Advertisement