தளபதி 66 படத்தில் இணைந்த சுப்ரிம் ஸ்டார் சரத்குமார்- என்ன ரோலுன்னு தெரியுமா? கரெக்ட்டா இருப்பாரு.

0
258
Thalapathy
- Advertisement -

தளபதி 66 படத்தில் இணைந்திருக்கும் சரத்குமார் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள். பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் கதை:

இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். விஜய் மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் நேற்று வெளியான கேஜிஎஃப் 2 படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பீஸ்ட் படம் ஏமாற்றம் தான். மேலும், விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Vijay 66 Officially Announced Directed By Vamsi And Produced By

பீஸ்ட் படத்தின் நிலைமை:

இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் வந்து இருந்தாலும் வசூலில் பீஸ்ட் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூலில் முந்தைய படங்களின் சாதனையை பீஸ்ட் முறியடித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் படத்துக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்கில் எல்லாம் பீஸ்ட் படம் எடுக்கப்பட்டு கேஜிஎப் 2 படம் மாறி உள்ளன என்று கூறப்படுகிறது. இதனால் அடுத்த படத்தில் விஜய் நல்ல கம்பேக்கை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Vijay 66 Director Vamsi | விஜய் 66 பட இயக்குனர் வம்சி

தளபதி 66 படம் பற்றிய தகவல்:

வம்சி தமிழில் ஏற்கனவே கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் எரோட்டோமேனியா ( Erotomania) நோய் பின்னணியில் எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.

தளபதி 66 படத்தில் சரத்குமார்:

தனக்கு சம்பந்தமில்லாத நபர் தன்னை நேசிப்பதாக கற்பனை செய்து கொள்வது எரோட்டோமேனியா ஆகும். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்று இருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து விருவிருப்பாக சூட்டிங் நடைபெறுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்துள்ளார். அவர் என்ன கதாபாத்திரத்தில்? நடிக்கிறார் என்று ரசிகர்கள் பலர் கேட்டு வந்த நிலையில் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்த படம் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த சர்ப்ரைசாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement