விஜய்யை விமர்சித்து பாஜக பிரமுகரும், நடிகருமான சரத்குமார் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சரத்குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கி கொண்டு வருகிறார். இவர் சினிமாவை தாண்டி அரசியல்வாதியாகவும் கலக்கி வருகிறார்.

இவர் ஆரம்பத்தில் சொந்தமாக கட்சி துவங்கி நடத்தி வந்தார். அதன்பின் தற்போது இவர் பாஜகவில் இணைந்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பெரம்பூரில் பாஜக சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார், விஜய் எதையும் தெரிந்து கொண்டு பேச வேண்டும். அன்பு சகோதரர் விஜய் ரொம்பவே பிரபலமான நடிகர்.
சரத்குமார் வீடியோ:
அவரை நான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லி இருந்தேன். அது பெரிய சர்ச்சையாக இருந்தது அனைவரும் தெரிந்தது தான். சமீபத்தில் நடந்த விழாவில் விஜய், மத்திய அரசு- மாநில அரசும் ஹாஸ்டேக் போட்டு எல்கேஜி பசங்க போல் விளையாடுறாங்க. அங்க நம்ம பசங்க ஒரு ஹாஸ்டேக் போட்டு சம்பவம் செஞ்சாங்க என்று பேசி இருந்தார். சம்பவம் என்றாலே சினிமாவில் யாரையாவது போட்டு தள்ளுவது தான் அர்த்தம். என்னடா சம்பவம் செஞ்சாங்க, பேசும்போது தெளிவாக பார்த்து பேச வேண்டும். உண்மையை பேச கத்து கொள்ளுங்கள் விஜய்.
View this post on InstagramA post shared by Puthiya Thalaimurai Tv (@puthiyathalaimurai)
விஜயை வெளுத்து வாங்கியது:
அதேபோல் பிரசாந்த் கிஷோர் இந்தி தெரியாத ஒருத்தர் இல்லை. உனக்கு அரசியல் வியூகத்தை வகுத்துக் கொடுக்க இந்தி தெரிந்த ஒருத்தர் தான் தேவையா? டேய் எங்கடா இருக்கீங்க, நீங்க எல்லாம் யார்கிட்ட பிராடுதானம் பண்றீங்க, வாட் ப்ரோ? வைய் ப்ரோ? சொந்த தொகுதியிலேயே பிரசாந்த் கிஷோர் தோத்து போயிட்டாரு. அவர் விஜய்யை எப்படி ஜெயிக்க வைக்கப்போகிறார்? என்று பார்க்கலாம். பிரசாந்த் கிஷோர் திமுகவை ஜெயிக்க வைத்தது போல விஜய் கட்சியும் ஜெயிக்க வைப்பாரா? தேர்தலில் பார்த்து விடலாம் என்று பேசி இருக்கிறார்.

விஜய் குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ‘தளபதி 69’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் விஜய் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது.

விஜய் அரசியல்:
இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் இவர் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்து இருந்தார். இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்து இருக்கிறது என்று கட்சி அலுவலகத்தில் விழா நடத்தி இருந்தர்கள்.






