அப்பான்னு சொல்ல வெக்கமா இல்ல, இவரு உன் அப்பாவா. ரசிகரின் கேள்விக்கு ராதிகா மகள் கொடுத்த பதிலடி.

0
151654
Sarathkumar
- Advertisement -

இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைத்து இருக்கிறார். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட், பாசம் பாணியில் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் தனசேகரன். பல வருடங்களுக்குப் பிறகு நடிகை ராதிகா, அவரது கணவர் சரத்குமார் இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப். இவரை 1985 ஆம் ஆண்டு திருமணம் ராதிகா திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஒரே ஆண்டில் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன் பின்னர் ராதிகா லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ராயன் என்ற மகளும் பிறந்தார். பின் ராதிகா அவர்கள் ரிச்சர்ட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கும் நடிகர் சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும், நடிகர் சரத்குமாருக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றார். ராதிகா இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் பாருங்க : பைக்கில் படு மோசமான வசனம். திரௌபதி இயக்குனரின் பதிவால் நடவடிக்கை எடுத்த காவல் துறை. நன்றி தெரிவித்த இயக்குனர்.

இந்நிலையில் ராதிகா மகள் ரேயான் குறித்து சோசியல் மீடியாவில் தவறாக பேசிய நபரை தாறுமாறாக வறுத்து எடுத்தார் ரேயான். தற்போது இந்த தகவல் வைரல் ஆகி வருகிறது. சரத்குமார் நடிப்பில் வந்த வானம் கொட்டட்டும் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயான் அவர்கள் இந்த படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியது, உங்களை நினைக்க பெருமையாக உள்ளது அப்பா என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதை பார்த்த நபர் ஒருவர், அம்மா ஓகே, சரத்குமாரை அப்பா என்று சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டு உள்ளார். அதற்கு ரேயான் அவர்கள் கூறியது, ஆம், அவர் என்னுடைய அப்பா தான். இப்ப என்ன பண்ண போற நீ? என்று கோபமாக பதிலளித்து உள்ளார். மேலும், ரேயானின் இந்த பதிலுக்கு பலர் ஆதரவாக கமெண்ட் செய்து வருகிறார்கள். ரேயான் இப்படி பதிலளித்த ட்விட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement