அம்மா பயன்படுத்திய பொருட்கள் முதல் அவர் வாழ்ந்த அறையை கோவிலாக பார்த்து வரும் சரத்குமார் – Hometour வீடியோ இதோ.

0
801
sarathkumar
- Advertisement -

நடிகர் சரத்குமார் தன்னுடைய மறைந்த தாய்க்காக அவருடைய வீட்டில் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னனி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சரத்குமார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடிபில்டர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் படங்களில் வில்லன் வேடத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக கலக்கி இருக்கிறார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். மேலும், இவர் அந்தக் காலத்திலேயே உடற்பயிற்சிகளை ஒழுங்கான முறையில் மேற்கொண்டு உடல் கட்டுக்கோப்புடனும், உடல் ஒருங்கிணைப்பாகவும் வைத்திருந்தவர்.

- Advertisement -

சரத்குமார் திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் சரத்க்குமார் 20 வயதிலே மிஸ்டர் மெட்ராஸ்(சென்னை ஆணழகன் ) என்ற போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தையும் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாரிசு படம் :

இந்த நிலையில் தான் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தில் சரத்குமார் விஜய்க்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 11 ஆம் தேதி இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் துணிவு படத்தின் வெளியிட்டின் போது அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும், உதவியும் வழங்கினார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சரத்குமார் வீடு :

இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் சரத்குமார் வீட்டிற்கு சென்று ஒரு செய்தி ஊடகம் பேட்டி எடுத்திருந்தது. அந்த பேட்டியில் பல விஷியங்களையும் வீட்டையும் சுற்றியும் காட்டிய அவர் தனக்கு மிகவும் பிடித்த அறையை காட்டினார். அந்த அறை இவருடைய அம்மாவின் அறை. அந்த அறையில் அவருடைய நியாபகர்த்தமாக அவர் போட்டிருந்த மூக்கு கண்ணாடி, வளையல், ஜெயின் இவற்றை ஒரு பிரேம் செய்தி தனியாக வைத்துள்ளார். என்னுடைய அம்மா என்னுடைய வாழ்க்கையில் மிக மிக முக்கியமானவர் என்று கூறினார்.

அம்மாவின் பொருட்களை பாதுகாக்கும் சரத்குமார் :

மேலும் அவர் கூறுகையில் இந்த அறையில் தான் தன்னுடைய அம்மா கடைசி காலங்களை கழித்தார் என்றும், அவருடைய பொருட்கள் மறைந்து போகக் கூடாது வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று அப்படி செய்ததாக கூறினார். மேலும் அவருடைய கண்ணாடியை பார்க்கும் போது அவரே தன்னை பார்ப்பது போல இருக்கும் என்று கூறினார். சில சமயங்களில் மன கஷ்டங்கள் ஏற்படும் போது அந்த அறைக்கு வந்து சிறிது நேரம் இருப்பார் என்றும் கூறினார். இப்படி பல விஷியங்களை அந்த விடியோவில் பகிர்ந்து கொண்டார். இவரது தாய் புஷ்பலதா கடந்த 2013ஆம் ஆண்டு இவ்வுலகத்தை விட்டு மறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement